பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றுவாய் - 3.

‘உரையும் பாட்டும் உடையோர் சிலரே;

மரையிலே போல மாய்ந்திசினுேர் பலரே” * *

எனப் புறநானூறு கூறுகின்றது. ஆம்! தாமரை மலரின் தோற்றமும் ஏற்றமும் தெய்வத் திருத்தகவும் அத் தாமரை இலக்கு இல்லையே! நீருள் கிடந்து வாளா அழுகியன்றாே போயொழிகின்றது! மரை இலைபோல மாயும் வாழ்வைக் கருதாமல், மரைமலர் போல மாயா வாழ்வை விரும்பிய சான்றாேர் உரைக்கு எடுத்துக் காட்டாக விளங்குபவர் டாக்டர்

மு. வ.

மு. வ. ஒரு மந்திரமொழி :

‘மு. வ. என்னும் இரண்டெழுத்தினைத் தமிழ்கூறும் நல்லுலகம் நன்கு அறியும். ‘மு. வ. என்பது தமிழ்நாட்டில் ஒரு மந்திர மொழியாக வழங்கப் பெறுகிறது’ என ஒர் ஆங்கிலப் பேராசிரியர் ஒருமுறை குறிப்பிட்டார். அத்தகு ஆற்றல் மிக்க பெயர் மு. வ. என்பது.

எளிய குடும்பத்தில் பிறந்து, உழைப்பால் உயர்ந்து, சிந்தனைச் சிறப்பால் பிறர் நெஞ்சில் நிறைந்து, வாழ்வால் பலர்க்கும் பயன்பட்டு, தொண்டால் என்றும் நின்றுவாழும் பெருந்தகையர் மு. வ.

மும்மைசால் முத்தமிழ் என்றும், தெய்வத்தமிழ் என்றும், “ஞாலம் அளந்த மேன்மைத் தமிழ்’ என்றும் பல்லாற்றானும் பாராட்டப்பெறும் பைந்தமிழ் வளர்ச்சிக்குத் தம் எழுத்தால், பேச்சால், வாழ்வால் ஏற்றந் தந்த பெருமகளுர் மு. வ.

இயற்றமிழில் நிறை புலமை எய்தி, இசைத் தமிழ் வளர்ச்சி யிலும் ஆராய்ச்சியிலும் இனிதே ஈடுபட்டு, நாடகத் தமிழ் வளர்ச்சியில் நாட்டங் கொண்டு, முத்தமிழ் வாழ்வினரின் நெஞ்சங்களில் முழுதுற நிறைந்து நிற்பவர் மு. வ.

இறந்தும் இறவாத தன்மையர் உலகில் ஒரு சிலரே: மறைந்தும் உலகம் மறவாத மாண்பினர் ஒரு சிலரே; பொன் அடல் மறையினும் புகழுடலுடன் வாழ்வோர் ஒரு சிலரே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/15&oldid=586222" இலிருந்து மீள்விக்கப்பட்டது