பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 பெருந்தகை மு. வ.

பருவுடல் வீழினும், வாழ்ந்த வாழ்க் கையால் நுண்ணுடல் கொண்டு வாழ்வோர் ஒரு சிலரே. அவ் வொருசிலருள் ஒருவர் மு. வ.

மூவாத்தமிழ் மு. வ.

தமிழ்மொழி, பழைமைக்கும் பழைமையது; புதுமைக்கும் புதுமையது; முன்னைப் பழம் பொருட்கும் முன்னேப் பழம் பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே’ எனப் பெறும் செம்மேனி அம் மானைப்’ போ ன் /ו( பெற்றியது; வரம்பிலா மொழிகள் உலகில் பிறந்து இறந்தொ ழிய, என்றுங் குன்றா வீறுடன் விளங்குவது; ஆகலின், இதனைச் ‘சாவா மூவாத் தமிழ்’ என்பது சாலவும் பொருந்துவதே யாகும். இத்தகு தமிழ், இளமை எழிலுடன் என்றும் விளங்க உழைத் தவர் எண்ண ற்றாேர், அவர்களில் இவ் விருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்தோர் சிலருள் குறிப்பிடத்தக்க ஒருவர் மு. வ. எனவே சாவா மூவாத் தமிழுக்கு மு. வ. என்பது தகும். குன்றின் மேலிட்ட விளக்கு:

குடத்துள் விளக்காகவும் தடத்துள் (உறையுள்) வாளாகவும் அமையாமல் குன்றின்மேல் இட்ட சுடர்விளக் காகவும், களத்தில் துலங்கிய கூர்வாளாகவும் விளங்கிய வாழ்வு மு. வ. அவர்களின் வாழ்வு. அவர்தம் வாழ்வினைக் குறித்து அவரே எழுதியுள்ள சில வரிகள் கருதத்தக்கன.

‘என் வாழ்க்கை படிப்படியான முன்னேற்றங்கள் உடையது. திடீர் மாற்றங்களோ சரிவுகளோ இல்லாதது.

வட ஆர்க்காடு மாவட்டத்தில் திருப்பத்துரில் பிறந்தேன்.

பாட்டனர் உழவர். பெரிய தனக்காரர். தந்தை வியாபாரம் செய்தவர். நானே குடும்ப வட்டாரத்தில் முதல் பட்டதாரி.’

எடுத்துக் காட்டான எழில்வாழ்வு :

எளிய குடியிற் பிறந்தவரும் உழைப்பால் உயர முடியும்’ என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டும் உயர்வாழ்வு மு. வ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/16&oldid=586234" இலிருந்து மீள்விக்கப்பட்டது