பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 பெருந்தகை மு. வ.

அமைப்பது மட்டுமன்று. அவர் எவ்வழியில் தமிழை வளர்த் தாரோ அவ் வழியிலே நின்று நாமும் நம்மாலான அளவுக்குத் தமிழை வளர்ப்போம் என்று உறுதி கொள்வதும் அந்தத் தமிழ் மொழி மூலமாகப் பெறத்தக்க கருத்துக்களை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய விதத்தில் அதனைப் புகுத்த வேண்டும் என்

பதும் நாம் மேற்கொள்ள வேண்டிய உறுதியாகும்.’

நிகழ்காலத் தமிழ் வளர்ச்சியில் மு. வ. விற்குள்ள பங்கினை நினைந்து நெஞ்சாரப் பாராட்டினர் அண்ணு.

  • நாங்கள் கல்லூரியிலே படித்த காலத்தில் இந்த அளவிற்குத் தமிழ் ஆர்வம் இருந்ததில்லை. இந்த அளவிற்குத் தமிழ் ஆர்வம் இருக்கவேண்டும் என்ற எண்ணங் கூடத் தோன்றியதில்லை. ஆளுல் மிக வேகமாகக் கடந்த இருபது ஆண்டுகளில் இருநூறு ஆண்டுகள் பாடுபட்டால் மட்டுமே பெறக் கூடிய ஒரு பெரிய வளர்ச்சியைத் தமிழ் ஆர்வத்திற்கும் தமிழ் வளர்ச்சிக்கும் நாம் பெற்றிருக்கின்றாேம். அதற்கு உறுதுணையாக இருந்தவர்களில் மிக முன்னணியில் வைத்துப் போற்றப் படத்தக்கவர்கள் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர் களும் டாக்டர் மு. வ. அவர்களும்’.

முடிப்புரையாக மு. வ. வின் தோற்றத்திற்கும் எழுத்திற்கும் உள்ள இருவே றியல்புகளை நயமாக எடுத்துரைத்தார் நாவி றுடைய நல்லறிஞர் அண்ணு.

டாக்டர் மு. வ. அவர்களே ப் பார்த்துவிட்டு அவர்களுடைய ஏடுகளே ப் படித்தால், இந்த சாந்த புருஷரா இவ்வளவு புரட்சி கரமான கருத்துக்களை எழுதி இருக்கிருச்? உண்மை தாளு? என்று எண்ணிப் பார்ப்பார்கள். அப்படித் தோற்றத்திலேயும் நடைமுறையிலேயும் தன்மையிலேயும் அமைதியே உருவாக இருந்து கொண்டு அந்த அமைதியைத் துனேக் கொண்டு, ஆர்வத்தை உடன் வைத்துக்கொண்டு தமிழ்மக்களுக்கு வழி காட்டியாகப் பல அரிய கருத்துக்களே அவர் தந்துள்ளார். அந்தப் பெரியாருடைய திருவுருவப் படம் இந்த இடத்திலே திறந்து வைக்கப்படுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடை கிறேன்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/146&oldid=586218" இலிருந்து மீள்விக்கப்பட்டது