பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை வாழ்க்கை 135

மு. வ. மருத்துவமனை :

டாக்டர் மு. வ. வின் மைந்தர்கள் திரு. அரசு, நம்பி, பாரி ஆகிய மூவரும் டாக்டர்கள். அவர்கள் தம் தவப்பெருந் தந்தையார் பெயரில் ஒரு மருத்துவமனை எழுப்பினர். சென்னை அமைந்தகரை 360, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அந்த மருத்துவமனையின் திறப்பு விழா 3–6–71 ஆம் நாள் நிகழ்ந்தது. தமிழக அரசு பொதுநலத்துறை அமைச்சர் மாண்புமிகு பேராசிரியர் அன்பழகன் எம். ஏ., அவர்கள் மருத்துவ மனயைத் திறந்து வைத்து வாழ்த்தினர். தமிழ் மக்களின் உளநோய் மருத்துவராகத் திகழ்ந்த டாக்டர் மு. வ, வின் பெய ால் உடல்நோய் மருத்துவமனை எழுப்பியது பொருத்தமான செயலாம்: ‘உடம்பார் அழியின் உயிரார் அழிவர்; திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்’ என்பது திருமந்திரத் திரு மொழியன்றாே!.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/147&oldid=586219" இலிருந்து மீள்விக்கப்பட்டது