பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i42 பெருந்தகை மு. வ.

ஊஸ்டர் கல்லூரியில் பெற்ற டி. லிட். பட்டத்தை மதுரைப் பல்கலைக் கழக ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்குக் கூடத் தெரி வித்தார் அல்லர். அவர் பட்டம் பெற்றுக்கொண்டு மீண்ட பின்னரும் விளம்பரப் படுத்தினர் அல்லர். விரல்விட்டு எண்ணத் தக்க சிலரும் அப் பெருமையை அறியாவண்ணம் அடக்கத்தால் போற்றிக்காத்தார்.

ஏழை மாணவர்களும் அலுவலக ஊழியர்களும் மு. வவின் பொருளுதவியை நாடிப் பெற்றது உண்டு. தாமே முற்பட்டு உதவிய நிகழ்ச்சிகளும் உண்டு. ஆயினும் அவற்றைத் தம் நெஞ்சோடு நெஞ்சாக வைத்துக் காத்தார். தாங்கள் செய்த உதவி என்று உதவி பெற்றேர் நன்றியுரைத்த போதும் செய்தேளு’ என்று மறக்கும் நிலையும் பெற்றார்,

விருந்தோம்பல் :

அறிந்தவர் எவசாயினும் அவரை மட்டுமல்லாமல் அவர் குடும்பத்திலுள்ள அனைவரையும் பெயர் சொல்லி நலம் விளுவு வது மு. வ. வின் சிறந்த வழக்கம். விடுதேடி வந்தவர்களே உண் பதற்கு ஏதாவது கொடுக்காமல் அனுப்புவது அவர் வழக்கம் அன்று. எவ்வுணவாயினும் தாமே எடுத்துப் பரிமாறி இன்புறு வார். வந்த விருந்தினர் எவ்வளவு தடுத்துரைத்தாலும் தாமே முந்து நின்று விருந்தோம்புவார். வந்தவர் மாணவர், பெரியவர் பெண்டிர் எவராயினும் மு. வ வின் அன்பிற்குக் கட்டுப்பட்டு அமைந்துவிடுவர். அத்தகு தாய்மையுள்ளம் அவ்வுள்ளம்:

ஒல்லாதது மறுத்தல் :

ஒல்லுவது ஒல்லும் என்றலும் ஒல்லாதது

இல்லென மறுத்தலும்’

நனி நாகரிகம் ஆகும். அந் நாகரிகம் போற்றியவர் மு. வ. தம் துறையில் நிறை புலமை உடைய மு. வ. வேறு துறைகளிலும் பயிற்சியுடையவராகவே விளங்கினர். ஆளுல் தமிழ்த் துறை தொடர்பான நூல்களை அன்றிப் பிற துறை நூல்களுக்கு எத் தகையவர்கள் வலியுறுத்தினுலும் முன்னுரை வழங்கினர் அல்லர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/154&oldid=586227" இலிருந்து மீள்விக்கப்பட்டது