பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணைவேந்தர் 효4

‘அதில் எனக்குப் போதிய அறிவும் அனுபவமும் கிடையாது; என்னை விட்டு விடுங்கள்’ என்று மறுத்து விடுவார். ‘கண்டது கற்கப் பண்டிதன் ஆவான்’ என்னும் பழமொழிக் கருத்து, தமக்கு உடன்பாடு இல்லாமையைத் தெரிவிப்பார். தமிழ் நூல் களுக்கு முன்னுரை வழங்கும் போதும் தம் கருத்து வேற்றுமை யினையும், நூலிற் காணப்படும் பிழைகளையும் விடாமல் சுட்டு வார். கருத்துப்பிழை மலிந்த நூலுக்கு முன்னுரை தர மறுத்து விடுவார்.

ஒரு பெருமிதம் :

எவரையும் மதித்துப் பழகுவார் மு. வ. தம்மை அறிமுகப் படுத்தும்போது தம் பெயரைச் சொல்லிப் பின்னர்த் தமிழா சிரியர்’ என்று சொல்லி மகிழ்வார். தாம் துணைவேந்தர் பதவி யில் இருந்துங்கூட துணைவேந்தர்’ என்று தம்மை அறிமுகப் படுத்திக் கொள்வது இல்லை. தம் நூல்களின் பதிப்புகளிலும், மு. வரதராசன், தமிழ்ப் பேராசிரியர், சென்னே-301 என்றே குறிப்பிட்டார். பதவி இன்று வரும்; நானே போகும்; ஆளுல் தமிழாசிரியர் என்பது என்றும் இருப்பது; அதனைச் சொல்லிக் கொள்வதில்தான் நான் மகிழ்ச்சியடைகிறேன்’ என்று சொல் *Ls。

கட்டடப் பணி :

பல்கலைக் கழகப் பணி ஏற்ற முதல் ஆண்டு முழுவதும் பல்கலைக் கழகக் கட்டடப் பணிக்கே செலவிட்டார். வெளியூர் களுக்குச் செல்வதையும் தகைந்தார். வெளிநாடுகளில் இருந்து வந்த அழைப்புகளையும் ஏற்க மறுத்தார். தாம் பணியேற்ற நாள் முதல் வாழ்நாள் அளவும் புதுப்புதுக் கட்டடங்களைக் கட்டி உளமகிழ்ந்தார். பிறர்க்குத் தாமே உடன்போய்க் கட்டடங்களே யும், அதன் வளாகங்களையும் காட்டுவதிலே பேருவகை உற்றார். குழந்தையைக் கொஞ்சிக் கொஞ்சி ஊட்டி வளர்ப்பதுபோலப் பல்கலைக் கழகத்தை வளர்ப்பதிலும் பொலிவாக்குவதிலும் முழுமையாக ஈடுபட்டார். அதன் முதுகெலும்பு போன்றவை கட்டடங்கள் தாமே தஞ்சைப் பெரிய கோயிலுக்கும் பெரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/155&oldid=586228" இலிருந்து மீள்விக்கப்பட்டது