பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 பெருந்தகை மு. வ.

மன்னன் இராச ராசனுக்கும் என்ன தொடர்பு உண்டோ, அன்ன தொடர்பு பேராசிரியர் மு. வ. வுக்கும் மதுரைப் பல்கலைக் கழகக் கட்டடங்களுக்கும் உண்டு என்பதைத் தெளிவுபெற

நிலைநிறுத்தினர்.

இயற்கை ஈடுபாடு :

மு. வ. வுக்கு அமைந்த இயற்கை ஈடுபாடு நாம் முன்னரும் அறிந்ததேயாம். இயற்கையோடு இயைந்த வாழ்வுடைய அவர்க்கு, விரிந்து பரந்த பல்கலைக் கழகப் பரப்பு இன்ப முட் டியது. அமணர் மலே ஒரு பாலும், நாகமலை ஒரு பாலும் அமைய நாகமலைச் சாரலிலே பீடுற எழுந்து நிற்கும் துணைவேந்தர் மாளிகையில் இருந்துகொண்டு மலக்காட்சியிலே உள்ளம் தோய்வார். இளந்தென்றலிலே உள்ளம் பறிகொடுத்து உவப் புறுவார். புல்லுற்றின் அருமையையும், மலைக்காற்றின் மாண் பையும், பரந்த வெளியின் பான்மையையும், கதிரோன் ஒளியின் கவினையும் கண்டு களிகூர் வார்.

‘கதிரவன் மலைவாயில் வீழும் மாலை நேரம், விண் முழுதும் குடைவிரித்து விண் மீன்கள் மின்னும் இரவு நேரம், எந்நேர மாயினும் திறந்த வெளியில் அமர்ந்துகொண்டு நரிகள் ஊளை யொலி தொலைவில் கேட்க அமைதியாக நீண்ட நேரம் பக்கத்தில் அமர்ந்திருப்பவர்களிடம் கூடப் பேசாது இயற்கையின் பத்தில் மூழ்கிக் கிடப்பார். இஃது இயற்கை ஈடுபாடு பற்றிய ஓவியம்.

பல்கலைக் கழகக் கட்டடங்களைச் சூழவும் இடை இடையே யும் மரம் செடி கொடிகளை நட்டு வளர்க்கும் திட்டத்தை நன்கு நிறைவேற்றினுர் பல்கலை நகரின் ஒவ்வொரு தெருவிற்கும் அத் தெருவில் அமைந்துள்ள மரத்தின் பெயரால் வாகைச் சாலை, தென்னஞ் சாலை, வேப்பஞ்சாலை, கொய்யாச் சாலை, மாஞ் சாலை என்று பெயரிட்டமை அவர்தம் இயற்கை ஈடுபாட்டின் முதிர்வில் முகிழ்த்ததேயாகும்.

1. செந்தமிழ்ச் செல்வி சிலம்பு கி. பால் . திரு இரா. முத்துக் குமாரசாமி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/156&oldid=586229" இலிருந்து மீள்விக்கப்பட்டது