பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. பெரும் பிரிவு

4-9-74ஆம் நாள் மு.வ. வின் இளைய மைந்தர் பாரிக்குத் திருமணம் நிகழ்ந்தது. திருமண வேலைகளைக் கவனிப்பதற்காக ஒரு வாரத்திற்கு முன்னமே சென்னைக்கு வந்தார் மு.வ. திரு மணம் மயிலாப்பூர் இராசேசுவரி திருமண மண்டபத்தில் நிகழ்ந்தது. திருமண வரவேற்பிலும் விருந்தோம்பலிலும் பெரும்பங்கு கொண்டார். தமிழ்நாடு ஆளுநர் மேதகு கே. கே. ஷா அவர்களும், அமைச்சர்களும் கலந்து கொண்ட அவ் விழாவில், ஆளுநர் விடைபெற்றுச் செல்லும்போது Doctor Varadarajan you must be prepared to serve centre also. Your service should not be restricted to Tamil Nadu alone” crop, கூறினர். மேலும், ‘உங்கள் வீட்டுக்கு ஒருநாள் வருகிறேன் விருந்து படையுங்கள்’ என்று சொன்னர். அப்பொழுது, என் கடமை முடிந்துவிட்டது” என்றார் மு.வ.

செப்டம்பர் 8, 9ஆம் நாள்களில் மதுரைப் பல்கலைக்கழகச் சார்பில் அகிலன் கருத்தரங்கு நடைபெற்றது. இக் கருத் தரங்கைத் தொடங்கி வைத்து மிக ஆர்வத்துடன் உரையாற்றி ஞர் மு.வ. அப்பொழுது துணைவேந்தர் பொறுப்பிலே இருந்து விரைவில் விடுபெற்று எழுத்துப்பணியில் ஈடுபட்டு உழைப் பதற்குத் தமக்குள்ள ஆர்வத்தை வெளியிட்டார்.

தமிழ்ப் பேராசிரியர் பதவியில் இருந்து நான் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு பெற்றுவிட்டேன். துணைவேந்தர் பதவியில் இருந்தும் இன்னும் சில திங்களிலோ ஒர் ஆண்டிலோ விடுபெற்றுவிடுவேன். பிறகு ஆராய்ச்சிப் பேராசிரியராக இருக்க நேர்ந்தாலும் அதிலிருந்தும் சிலநாட்களில் விடை பெற்று விடுவேன். நான் கடைசி வரையில் ஓய்வுபெற விரும் பாத ஒருபதவி உண்டு என்றால் அஃது எழுத்தாளர் பதவிதான்.

பெ. மு. வ.-11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/173&oldid=586249" இலிருந்து மீள்விக்கப்பட்டது