பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 பெருந்தகை மு. வ.

எழுத்து என் உயிருடன் கலந்துவிட்ட ஒன்றாகும். என் கடைசி மூச்சு உள்ளவரையில் ஏதாவது எழுதிக் கொண்டே இருப்பேன். எழுத முடியாதபோது சொல்லிக் கொண்டாவது இருப்பேன்.”

25-9-74ஆம் நாள் பட்டமளிப்பு விழா நிகழ இருந்தது. அதற்கு முதல் நாள் இரவு 11-30 மணிவரை அவர் நண்பர் திரு. யோகசுந்தரம் அவர்களுடன் பேசிக்கொண்டே சான்றிதழ் களில் கையொப்பமிட்டார். அப் பணியில் தாம் உதவிசெய்வ தற்கு யோகசுந்தரம் வேண்டியும் மு.வ. ஏற்றுக்கொள்ளாமல் தாமே தாளைப் புரட்டிக் கையெழுத்திட்டார். இரவு இரண்டு மணிக்குப் படுத்து ஐந்து மணிக்கே எழுந்துவிட்டார். பட்ட மளிப்பு விழாவில் சிறப்புப் பட்டம் பெறுதற்கு வரும் நடுவ ணரசுக் கல்வியமைச்சர் பேராசிரியர் நூருல் ஆசன் அவர்களை வரவேற்பதற்காக வானூர்தி நிலையம் சென்றார்,

காலை ஒன்பது மணிக்கு மீட்ைசி மகளிர் கல்லூரி விழா வுக்குத் தலைமை தாங்கினர். அப்பொழுது சோர்வுடன் காணப் பட்டார். பின்னர்ப் பகல் 12 மணிக்கு நாகமலை புதுக்கோட்டை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் சொற்பொழிவாற்றச் சென்றார். சொற்பொழிவு ஆற்றத் தொடங்கும்போது மார்பில் வலி ஏற்பட்டது; வியர்வை பெருகியது; நின்றுகொண்டு பேச இயலா நிலை உண்டாயிற்று. ஒருவாறு கூட்டத்தை முடித்துக் கொண்டு திரும்பினர்.

மாலை நான்கு மணிக்குப் பட்டமளிப்பு விழாத் தொடங் கியது. உரிய நேரத்தில் படுக்கையில் இருந்து எழுந்து விழா மண்டபத்துக்குச் செல்ல முடியாமல் திண்டாடினர் மு.வ. வலி மிகுந்து கொண்டே சென்றது. ஆயினும் பிறர் அறியாவண்ணம் மறைத்துக் காத்தார்.

நடுவணரசு அமைச்சர் நூருல் ஆசன், தமிழ்நாடு கல்வி யமைச்சர் டாக்டர் நாவலர் ஆகியோர் பட்டமளிப்பு விழாமண்ட பத்திற்கு வந்துவிட்டனர் என்னும் செய்தியைக் கேள்விப்பட்ட தும் ஒருவாறு முயன்று, உரிய உடைகளை அணிந்துகொண்டு விழா மண்டபத்துக்கு வந்தார். மாடிப்படிக்கட்டுகளில் ஏறமுடி யாமல் ஒருவர் தோள் துணையாக ஏறினர். பட்டமளிப்பு விழாத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/174&oldid=586250" இலிருந்து மீள்விக்கப்பட்டது