பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும் பிரிவு 163

தொடர்பான உரையையும் நின்றுகொண்டு படிக்க இயலாமல், அமர்ந்தே படித்தார்.

பல்கலைக் கழகப் பதிவாளர், துணைவேந்தர் உடல் நலக் குறைவை மருத்துவருக்கு அறிவித்து உதவி வேண்டினர். தமக்கு ஒன்றும் இல்லை என்றும், களைப்பே உடல் சோர்வுக்குக் காரணம் என்றும் மு.வ. கூறினர். தாமே தம் உடலைச் சரி யாக்கிக் கொள்வதாகக் கூறினர். மறுநாள் பார்க்க வேண்டிய கோப்புகளை எல்லாம் படுத்துக்கொண்டே பார்வையிட்டுத் தக்க ஆணைகளைப் பிறப்பித்தார்.

28-9-74இல் பாண்டியன் விரைவு வண்டியில் புறப்பட்டு 29-9-74 காலையில் சென்னைக்கு வந்தார். வழக்கமாகப் புகைவண்டி, நிலையத்திற்கு வருமுன்னரே தம் இருக்கையில் இருந்து எழுந்து, தம்மை அழைத்துச்செல்ல வந்திருப்பவர் களைக் கைக்குறிகாட்டி அழைப்பது வழக்கம். ஆல்ை, அன்று அவ்வாறு செய்ய இயலவில்லை. மதுரையில் இருந்து வந்ததும் நேரே வீட்டுப் பின்புறத்துத் தோட்டத்திற்குச் சென்று சுற்றிப் பார்த்த பின்னரே வீட்டினுள் போவது மு.வ. வின் வழக்கம். அன்று அதனையும் அவ்வாறு செய்யவில்லை. முழங்காலைப் பிடித்துக்கொண்டு வீட்டில் இரண்டு படிகளில் ஏறி நேரே படுக்கை அறைக்குச் சென்று படுத்துவிட்டார்.

மூத்தமகளுர் டாக்டர் அரசு இரத்த அழுத்தம் பார்த்தார். முழு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினர். இரண்டாம் மகளுர் நம்பி ஈ.சி.சி பார்த்து இதயத்தில் ஏற்பட் டிருந்த ஊறுபாட்டைக் கண்டுபிடித்து உணர்த்தினர். இந் நிலையிலும் தம் கடமையை மறந்தார் அல்லர் மு.வ. மறுநாள் அண்ணுமலை மன்றத்தில் நடைபெற இருந்த கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமையையும், 2-10-74ஆம் நாளன்று இராம லிங்கர் பணிமனை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத் தில் கலந்துகொள்ள முடியாமையையும் தெரிவிக்க ஏற்பாடு செய்தார். இராமலிங்கர் பணிமனைக் கூட்டத்திற்கெனப் போக்கு வரவு செலவுத் தொகையாகப் பெற்றுக்கொண்டிருந்த உரு. 75ஐயும் உடனே திருப்பி அனுப்பிவிடவும் ஏற்பாடு செய்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/175&oldid=586251" இலிருந்து மீள்விக்கப்பட்டது