பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 பெருந்தகை மு. வ.

தொடர்ந்து உடல்நிலை சீர்கேடாகவே இருந்தது. மனைவி மக்களும், குடும்பத்தவரும், பிறரும் வற்புறுத்தியும் மருந்தும் மாத்திரையும் உண்ண மறுத்துவிட்டார். உரிமையன்பு காட்டி யேனும் மருந்துண்ண வைத்துவிடவேண்டும் என உன்னிஞர் டாக்டர் சி. பாலசுப்பிரமணியன். ஒரு தாளே எடுத்து,

முந்தை யிருந்து நட்டோர் கொடுப்பின்

நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்

மாத்திரை சாப்பிட்டால் தான் உடல்நலம் கண்டிப்பாகத் தேறும் என மருத்துவ நிபுணர் கூறும்போது ஜனநாயக முறைப்படி எப்போதும் நடந்து கொள்ளும் நீங்கள் எங்கள் கண்ணிரைத் துடைக்கச் சிறிது விட்டுக் கொடுக்கக் கூடாதா?’ என்று எழுதி அவரிடம் தந்தார். ஆங்கில மருத்துவ முறையை மேற்கொள்ள மு. வ. இசையவில்லை. மருத்துவமனைக்குச் செல்லவும் இசைய வில்லை. இயற்கை மருத்துவ நெறியையே கடைப்பிடியாகக்

கொண்டார்.

மதுரையில் இருந்து துணைவேந்தரின் நேர்முக உதவி யாளர் திரு. சத்தியமூர்த்தி இரண்டு பெட்டிகளில் கோப்புகளைக் கொணர்ந்து கையெழுத்துப் பெற வந்திருந்தார். அவர் மு. வ. வின் நிலைமை கண்டு இரண்டு கோப்புகளில் மட்டுமே. கையெழுத்துப் பெற நினைத்தார். ‘இந்த இரண்டு கோப்பு களுக்குத்தான மதுரையில் இருந்து வந்தீர்கள்; என் உடல் நிலைபற்றிக் கவலைப்பட வேண்டா. எல்லாவற்றையும் எடுத்துப் படிக்க நான் சொல்லும் குறிப்புக்களை எழுதுக; நான் கையெழுத்து இடுவேன்’ என்று சொல்லி எல்லாக் கோப்பு களையும் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2-30 மணி வரை பார்த்து முடித்தார். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தொடர் பான கோப்புகளைப் பார்த்துப் பேராசிரியர் க. த. திருநாவுக்கரசு அவர்களிடம் கையொப்பமிட்டுத் தந்தார்.

7.10-74 காலை 10-30 மணிக்கு மு. வ. வின் உடல்நிலை மிகச் சீர்கேடடைந்தது. சென்னை பொது மருத்துவமனைத் தலைவர் டாக்டர் இராமச்சந்திரா மு. வ. வை வந்து பார்த்தார். உடனே மருத்துவமனையில் சேரவேண்டும் என்று கூறினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/176&oldid=586253" இலிருந்து மீள்விக்கப்பட்டது