பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும் பிரிவு 165

மற்றவர்களும் வற்புறுத்தினர். அப்பொழுதும் மு. வ. இக் கருத்தினை ஏற்கவில்லை. டாக்டர் இராமச்சந்திரா மு. வ. வைப் பார்த்து நீங்கள் நல்ல மனிதர்; ஆளுல் மோசமான நோயாளி’ (Best man but a worst patient) storp (5.5′-G s?-Gá. சென்றார்.

பிற்பகல் 3-45 மணிக்கு மேலும் உடல்நிலை சீர் கேடடைந்தது. அனைவரும் மருத்துவமனைக்கு மு. வ. செல்ல இசையவேண்டும் என்று மன்றாடினர்; வற்புறுத்தினர். அப் பொழுது பாரி நிலையம் திரு. செல்லப்பன், தணிக்கையாளர் திரு. சத்தியமூர்த்தி, டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் ஆகியோர் அருகில் இருந்தனர். மு. வ. நான் இன்னும் ஆறு ஏழு ஆண்டுகள் உயிர் வாழ்வேன்; 46 ஆண்டுகளாக என்னைக் காப் பாற்றிய இயற்கை மருத்துவம் இப்பொழுதும் என்னைக் காப் பாற்றும் இதய நோய் பற்றியே நான் ஒரு நூலே உடல் நலம் தேறியபின் எழுதுவேன்; அதைப் பாரியே பதிப்பிப்பார்” என்றார். பின்னர்த் தம் வலக்கை நாடியை இடக்கையால் பிடித்துப் பார்த்து ‘ஒருநாடி பேசவில்லை; அந்த நாடியை நாளைக் காலைக்குள் சரிப்படுத்தி விடுவேன்; கவலை வேண்டா’ என்று சொன்ஞர்.

இரவு 7 மணிக்கு டாக்டர் இரத்தின சபாபதி மு. வ. வைக் காண வந்தார். மு. வ. வைப் பார்த்துச் சில மாத்திரைகள் உட்கொண்டால் போதும்; அதனை ஏற்றுக் கொள்க என்றார். “நான் எழுபது வயது வரை வாழ்வேன்; என்னை என் போக்கில் விட்டு விடுக; மாத்திரை சாப்பிட வற்புறுத்த வேண்டா’ என்று தம் கொள்கையிலேயே உறுதியாக நின்றார்,

மறுநாளும் இதே நிலமை நீடித்தது. டாக்டர் இரத்தின சபாபதி இரத்த அழுத்தம் பார்த்தார் ‘எவ்வளவு அழுத்தம் உள்ளது?’ என மு. வ. விளுவினர். மருத்துவர் 120 என்று பதில் மொழிந்தார். ஆளுல் உண்மையில் 220 ஆக இருந்தது. இதயத் துடிப்பின் வேகம் உட்சட்டையையும் படபடவென அசையச் செய்தது. ஆயினும் அஞ்சாமல் இருந்தார். திரு.வி.க. உயர்பள்ளியைச் சேர்ந்த திருநாவுக்கரசு அருகில் இருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/177&oldid=586254" இலிருந்து மீள்விக்கப்பட்டது