பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. முன்னேர்கள்

நாடு :

‘முடியுடை வேந்தர் மூவர் தண்பொழில் வரைப் பாகத் திகழ்ந்தது தமிழகம். அவற்றுள் சேர நாடு யானைக்குப் பெயர் பெற்றது; சோழ நாடு வளமான சோறுடையது; பாண்டிய நாடு முத்துவளம் சான்றது. மேலும் சேரநாடு வில்லோடு வீரம் விளங்க நின்ற மண்; சோழ நாடு நீதி நிலைபெற்று நின்ற நிலம்; பாண்டிய நாடு தமிழ் கெழீஇய தண்டமிழ்ச் சாயலச் வாழ்ந்த புவி. இம் முந்நாடுகளே அன்றிப் பின்னுளில், பெருமை பிறங்கப் பேசப்பெற்ற நாடு தொண்டை நாடு’ ஆகும். இதனை த்,

‘தெண்ணிர் வயல் தொண்டை நன்னடு சான்றாேர் உடைத்து’ என்று தொண்டை மண்டல சதகம் புகழ்கின்றது. அப் புகழ்க்கு ஏற்பவே சான்றாேர் பலர் தோன் றிச் சால்புறக் கண்ட தவநாடு தொண்டை நாடாகும். இத் தொண்டை நாட்டில் தொண்டைமண்டல துளுவ வேளாளர் குடியில் பிறந் தவரே இவ் வரலாற்றின் எழிற் செல்வர் டாக்டர் மு. வரத ராசனர் ஆவர்.

ஊர் :

சென்னை மாநகரில் இருந்து பெங்களுர் செல்லும் பெரு வழியின் இடையே வரும் ஓர் ஊர் வாலாசாப் பேட்டை ஆகும். வாலாசா ரோடு’ என்னும் தொடர் வண்டி நிலையத்திற்கு வடக்கே ஒரு கல்லில் அமைந்துள்ளது அம்மூர். அவ் அம் மூருக்கும் வடக்கே மூன்று கல் தொலைவில் அமைந்திருக்கும் சிற்றுார் வேலம். சென்னை மாநகரிலே சீரும் சிறப்பும் எய்தவும்,

பெங்களூரிலே இருந்து பைந்தமிழ்க் கதைகள் திட்டவும் வளர்ந்த மு. வ. அவர்களின் சொந்த ஊர் இவ் வேலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/18&oldid=586257" இலிருந்து மீள்விக்கப்பட்டது