பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னேர்கள் 7

ார் ஆறும் எழில் மிக்க சிற்றுரேயாம். சென்னை-பெங்களூர்’ பெருவழி செய்த பேரிணைப்பு இது போலும் !

வேலம் மு. வ. அவர்களின் சொந்த ஊரேயாகும். பிறந்த - அன்று; தம் சொந்த ஊரைப் பற்றி அவ்வூருடையாரே கூறுகின் ருர்:

‘ஆர்க்காட்டில் இருந்து ஐந்தாவது மைலில் சோளிங்க புரம் போகும் சாலையில் அமைந்த கிராமம் அது. ஊரின் முகப்பிலேயே ஒரு நல்ல குளம் (ஊருணி) அமைந்து அழகான காட்சி தருகிறது. அதன் உயர்ந்த கரையின் மேட்டில் ஆல மரங்கள் பல சூழ்ந்து விளங்கும். குளத்திற்கும் ஊர்க்கும் இடையே நீரற்ற ஓடையும் பெரிய ஆலமரமும் அரசமரமும் _ள் ளன. அந்த மரங்களே ஊர்ப் பெரியவர்களுக்கு அரசியல் அரங்கம்; இளைஞர்களுக்கு ஆடும் களம்; அரட்டை மன்றம்: இவை எல்லாம் ஊர்க்கு மேற்கே உள்ளன. கிழக்கே உள்ள சந்திரம் பலருக்கு ஒதுக்கிடம்; சிலருக்கு ஊர்வம்புக் கூடம். வடக்குப் பகுதியில் உள்ள தெருவில் எங்கள் வீட்டின் திண்ணை ாமல் இருந்து பார்த்தால் வேலத்துமலை ஒருமைல் தொலைவில் தெரியும். இளமையில் அந்த மலையின் உச்சிப் பகுதி மட்டுமே தெரியும். மலைக்கும் எங்கள் தெருவுக்கும் இடையே அவ்வளவு மரங்கள் அடர்ந்திருந்தன. இப்போது வீட்டில் இருந்து பார்த் தால் மலையின் முழு வடிவமும் தெரிகிறது. மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டுப் போயின.

வேலத்து மலையில் இரண்டு சிகரங்கள் உள்ளன. ஒன்று “சட்டக்கல்’ எனப்படும். மற்றாென்று கூசுமலை’ (கூர்ச்சுமலை) ாயப்படும். ஆர்க்காடு, வாலாஜா, ராணிப்பேட்டை எங்கே விருந்து பார்த்தாலும் அந்த இரண்டு சிகரங்களும் எடுப்பாகத் தொன்றும்; கூசுமலை சிவலிங்கம் போல் தெரியும்; சட்டக்கல் பலிபீடம் போல் தோன்றும். இரயிலில் செல்லும் போதோ, பெங்களுர்ச் சாலையில் காரில் செல்லும் போதோ அந்த இரண்டு சிகரங்களின் பெருமிதமான அழகையும் நான் தவருமல் பார்த்து மகிழ்வது டண்டு. ஊரிலிருந்து பார்க்கும்போது சட்டக்கல் _ப ம் குறைந்ததுபோல் தோன்றும். ஆல்ை, ஆர்க்காடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/19&oldid=586269" இலிருந்து மீள்விக்கப்பட்டது