பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 பெருந்தகை மு. வ.

முதலான இடங்களில் இருந்து பார்த்தால் அதுதான் மற்றதை விட உயரமானது என்ற உண்மை விளங்கும். ஒரு பொருளின் உண்மையான மதிப்பு அல்லது ஒருவரின் உண்மையான சிறப்பு நெருங்கிப் பழகுகின்றவர்களுக்குத் தெரிவதில்லை என்பதற்கு நான் அதை அடிக்கடி எடுத்துக் காட்டாகச் சொல்வது உண்டு. சட்டக்கல்லின்மேல் நான் ஏறி நின்று வானத்தையும் நிலத்தையும் கண்டு வியந்திருக்கிறேன். கூசுமலையின்மேல் ஏற முயன்றேன். துணிவு வரவில்லை. அதன் உச்சியில் எப்படியோ பெரிய நெய்விளக்கு (தீபம்) ஏற்றுகிறார்கள். அவர் களின் அஞ்சாமையை என்ன என்று சொல்வது? கதையால் தமிழ் உலகளக்க வந்த மு. வ. அவர்கள் வேலத்து மலயைக் கதைக் கருப்பொருளாக்கி எழுதுகின் ருர். தம் சொந்த ஊரைத் தம் நண்பர் ஊராக்கி உவகை கொள்கிரு.ர்.

‘நண்பனுடைய சிற்றுார் என் உள்ளத்தைக் கவர்ந்தது. அந்த ஊரின் வளமோ, ஊராரின் வாழ்வோ என் உள்ளத்தைக் கவரவில்லை. அந்த ஊரின் அமைப்புத்தான் என் உள்ள த்தைக் கவர்ந்தது. வடக்கிலும் மேற்கிலும் மலைகள் சூழ்ந்து, வானுற ஓங்கிய மதில் சுவர்களாக நின்றன. அவற்றில் பெரிய மரங்கள் இல்லை; ஆனல் பச்சைப் பசேலென மஞ்சம் புல் வளர்ந்து போர்த்திருந்தது. மேற்கே நின்ற மலைகள் மண் மலைகள்: வடக்கில் ஓங்கிய மலைதான் கல்மலை; அந்த மலையே உயரமான மலையுமாகும். அந்த மலையின் அழகுக்கு அழகு செய்வன போல் அதில் இரண்டு குவடுகள் இருந்தன. ஒன்று தட்டையாய் அமர்ந்திருந்தது; மற்றாென்று குவிந்து ஓங்கியிருந்தது. இந்த இரண்டுக்கும் ஊரார் சட்டக்கல் என்றும் கூர்ச்சுமலை என்றும் வழங்கும் பெயர்கள் மிகப் பொருத்தமாக இருப்பது அறிந்து மகிழ்ந்தேன். மலையின் தோற்றத்தைச் சங்கப் புலவர் ஒருவர் கண்டால், அதன் குவடுகள் இரண்டையும் இரண்டு கைகளாகப் புனைந்து பாடியிருப்பார். இந்த மலையைச் சங்கப் புலவர் ஒருவரோ பலரோ அந்தக் காலத்தில் பார்த்திருக்கக் கூடும்; பாடல்களும் பாடியிருக்கக் கூடும். ஆனால், அந்தப் பாடல்கள் காலவெள்ளத்தை நீந்திக் கரையேற முடியாமல் அடித்துக்

---

1. எங்கள் ஊர்: வேலம். (ஆனந்த விகடன் : 8-8-1969.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/20&oldid=586275" இலிருந்து மீள்விக்கப்பட்டது