பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 பெருந்தகை மு. வ.

அனுப்பிய கையெழுத்துப் படியில் சில இடங்களில் திருத்தங் களைக் குறித்துள்ளேன். தாங்கள் அனுப்பிய சில பாட்டுக் களின் முறையை மாற்றி அமைத்து வேறு பாட்டுக்கள் எழுதியும், மேற் குறித்த 26 இல் சேர்த்துள்ளேன். ஒவியப் புலவரின் உதவி கொண்டு கருத்துக்கள் நன்கு விளங்குமாறு படம் வரைந்தால், நல்ல நூலாகலாம். சில பழமொழிகளையே கதையாக அமைத்துப் பாடியுள்ளேன். காலத்திற்கேற்ற சில புதுக் கருத்துக்களையும் காணலாம்.

செல்விக்குரிய ஊனும் உறக்கமும்’ என்ற கட்டுரை Gpg söSS1. S]6ðfl (H. G. Wells-Short Stories) Ágr sso Sessir எழுத எண்ணியுள்ளேன்.

உருவப் படத்தைக் குறித்து எனது வேண்டுகோள் ஒன்று. அச்சிட்டுச் செல்வியில் சேர்க்கும் படமன்றித் தனியாக 15 படங்கள் எனக்கு அனுப்புமாறு வேண்டுகின்றேன். இதல்ை இடையூறு ஒன்றும் இராதென எண்ணுகின்றேன்.

எல்லாம் வந்து சேர்ந்தமை அறிவிக்க வேண்டுகின்றேன்.

இங்ஙனம், தங்கள் அன்புள்ள,

(ஒ - ம்) மு.வரதராஜன்

குறிப்பு :

அச்சிட்ட உருவப் படத்தில் 1935-ம் ஆண்டில் வித்வான்

தேர்வில் முதன்மையாகத் தேறி ஆயிரம் ரூபாய்ப் பரிசு

பெற்றமையுங் குறிப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.

திரு. வ. சுப்பையாபிள்ளை, சென்னை.

வேலம், ராணிப்பேட்டை,

28–12–48

அன்புடையீர்,

வணக்கம். நலம். தங்கள் கடிதமும் பதிவஞ்சலில் அனுப்பிய அழகிய நாட்குறிப்பும் வரப்பெற்றேன். நன்றி பல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/190&oldid=586270" இலிருந்து மீள்விக்கப்பட்டது