பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னேர்கள் 11.

வருகின்றனர்) அரசங்குளம் என்பது அதன் பெயர். நீர்,

இளநீர்போல் இனிக்கும். காலையில் பலநாள் நான் நீந்திக்

குளித்த பொய்கை அது. அய்யோ! முயல்களும் குள்ளநரி: களும் பயமின்றி விளையாடித் திரியும்.

‘'நான் விரும்பிக் குளித்து வந்த மற்றாேர் இடம் ஊர்க்கு வடக்கே மலையடிவாரத்தில் உள்ள பெரிய ஓடை என்னும் அருவியாகும். சலசல’ என்ற ஒலியோடு வரும் அந்தக் குளிர்ந்த நீரில் குளித்து, பக்கத்தே ஓர் அத்தி மரத்தின் கீழே உள்ள பாறைமேல் அமர்ந்து நல்ல நூல்களைப் படிப்பது. வழக்கம். என் வாழ்வில் பலநாள் மனம் அமைதியில் மூழ்கிய இடம் அது. பாடல்களே வாய்விட்டுப் பாடி மகிழ்ந்த இடம் அது.

மாலைவேளையில் அங்கிருந்து காட்டில் மேயும் மான் களைப் பார்த்திருக்கிறேன். ஒரு சின்ன நாகப்பாம்பு படமெடுத்து ஆடியபோது அந்த இடத்தில் நான் தன்னந்தனியாக இருந் திருக்கிறேன். பத் தடித் தொலைவில் தரையில் உட்கார்ந்தபடியே அந்த அழகிய காட்சியைச் சிறிது நேரம் பார்த்துக்கொண் டிருந்தேன். தன் ஆட்டத்தை முடித்துக்கொண்டு அது ஓடி விட்டது. மலையிலிருந்து வரும் வழியில் உள்ள ஒடையின் மணலில் நடந்து மாலைப் பொழுதைப் போக்குவது வழக்கம். அப்போது பல புதிய சிந்தனைகள் எழுவதுண்டு ஒவச் செய்தி’ என்ற என் நூலின் புதிய கருத்துக்குப் பிறப்பிடம் அதுவே. இரண்டு புதினங்கள் நெஞ்சில் உருவான இடமும் அதுவே.

மலையில் சில சுனைகள் உண்டு. சுனைகளின் கரையில் பாறைகளின் சிறு பள்ளங்களில் மஞ்சள் நிறமான துகள் காணப்படும். தேவலோகத்துப் பெண்கள் (அரமகளிர்) வந்து சுனைகளில் குளிக்கும்போது பூசிக் கொள்வதற்காகத் தேய்த்த மஞ்சள் அது என் பார்கள். அங்கே வளரும் நுண்ணிய பாசிகள் உலர்ந்தபின் அவ்வாறு மஞ்சள் நிறம் பெறுவது இயற்கை. அதுவே உண்மை என்பதை வளர்ந்தபின் உணர்ந் தேன். முருகன் வேல்பட்ட காரணத்தால் அந்த மலை, வேலம் என்று பெயர் பெற்றது என் பார்கள். ஏழு மைலில் வள் வளிமலை இருப்பதையும் சுட்டிக் கூறுவார்கள். காட்டில் வேல மரங்கள்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/23&oldid=586278" இலிருந்து மீள்விக்கப்பட்டது