பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

二盘2 பெருந்தகை மு. வ.

இருப்பதை அறிந்தும், இவ்வாறு கற்பனை செய்து மகிழ்ந் தார்கள்.

‘மலையின் அந்தப் பக்கத்தில் தாழை ஓடை என்ற ஓடை உண்டு. அங்கே உள்ள தாழைமரங்கள் அழகான காட்சியாக இருக்கும். சங்க இலக்கியங்களில் வரும் இயற்கைக் காட்சி களையும், காந்தள் முதலான மலர்களின் அழகையும் உவமைச்

சிறப்புக்களையும் பாராட்டுவதற்கு இந்த அனுபவம் எனக்குப்

பயன்பட்டது.’

ஆழன்னுேர் :

இனி, வேலத்தில் வாழ்ந்த மு. வ. வின் முன்னேர்களைப்

பற்றிக் காண்போம்:

வேலத்தைச் சுற்றி அமைந்த ஏழு ஊர்களைக் கொண்ட . சமீன் ஒன்று முன்னே விளங்கியது. அந்த ஏழுர் சமீன்தாரராக மு. வ. வின் முன்னேர் வழி வழியாக விளங்கி வந்தனர். செல்வ வளமும் செல்வாக்குச் சிறப்பும் ஒருங்கே கொண்ட இவ் வழியில் வந்தவர் வரதராச முதலியார் என்பார். அவருடைய தம்பியார் சபாபதி முதலியார் என்பார். இவர் ஊரின் மணியக் காரராகப் பெரும்புகழுடன் விளங்கியவர். ஊரில் இருந்த ஒரு பங்களா வீடு இவர்தம் முன்னேருடையது. எனவே, இவர் தம் வீட்டினைப் பங்களா வீடு’ என்றே அனைவரும் அழைத் தனர். இவர் தம் பேரளுர் மு. வ. ஆகலின், ஏழுர் சமீன் பங்களா வீட்டார்’ என்றால் அது மு. வ. வீட்டாரையே குறிக்கும்.

தம்முடைய ஊரைக் குறித்துப் பெருமிதம் கொள்ளும் மு. வ. தம் முன்னேரைக் குறித்தும் பெருமிதம் கொள் கிரு.ர். அப் பெருமித உணர்வை நாம் அறிந்து கொள்ளும் வாய்ப்பும் தமக்கு வாய்த்துள்ளது.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது மறக்கமுடியாத பெரிய உண்மையே. உள்ளம் அதை எவ்வளவு தெளிவாக உணர்ந்திருந்தாலும் இளமை முதல் பழகிய சொந்த ஊர்

=- -

1. எங்கள் ஊர்-வேலம், (ஆனந்தவிகடன்; 8-8-69)

_____

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/24&oldid=586279" இலிருந்து மீள்விக்கப்பட்டது