பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னேர்கள் 1$

பற்றிய எண்ணமும், முன்னேர்கள் பற்றிய எண்ணமும் நெஞ், சத்தில் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

சென்னையில் ஒரு திருமணத்தின்போது, ஒரு பெரியவரைக் கண்டபோது அதை நன்றாக உணர்ந்தேன். அவர் தொண் ணுாறு வயதை எட்டிய முதியவர். புதுக்கோட்டையில் நீதிபதி யாக இருந்து ஓய்வு பெற்றுத் திருச்சியில் வாழ்ந்தவர். யாரோ என்னை அவர்க்கு அறிமுகப்படுத்தினர்கள்.

‘எந்த ஊர் சொந்த ஊர்’ என்று பெரியவர் என்னைக் கேட்டார்.

‘ஆர்க்காட்டுப் பக்கம், வேலம்’ என்றேன்.

வேலமா? அப்படியா?’ என்று கேட்டார், ஒருவகை வியப்புணர்ச்சியோடு என்னை உற்றுப் பார்த்தார்.

“நாங்களும் வேலமே. இப்போது திருச்சி சொந்த ஊர் ஆகிவிட்டது. என் தகப்பனர் வேலத்தில் பிறந்து வளர்ந்தவர். சின்ன வயதிலேயே திருச்சிக்கு வந்துவிட்டார். நான் சின்னப். பையனக இருந்தபோது ஒருமுறை என்னை அழைத்துக் கொண்டு போய் ஊரைக் காட்டினர். சின்ன ஊர். அழகாக இருந்தது’ என்றார்.

வியப்புணர்ச்சி என் உள்ளத்தில் குடி புகுந்தது. ‘வேலமா உங்கள் சொந்த ஊர்? அப்படியா?’ என்றேன். ‘யார் உறவினர்?’ என்றேன்.

சபாபதி என்று ஒருவர் மணியம் செய்தார். அவருடைய அண்ணன் ஒருவர்; உங்கள் பெயர்தான் அவருக்கு’ என்றார்.
அப்படியா? நம்ப முடியாத கதையாக இருக்கிறதே. அவர்கள் என் தாத்தாவும் அவருடைய அண்ணுவும்’ என்றேன். என் உள்ளத்தில் புதுமழை பொழிந்ததுபோல் அன்பும் ஆர்வமும் நிரம்பின.

பிறகு அந்தப் பெரியவரின் அன்புக்கை என் தோள்மேல் நெடுநேரம் இருந்தது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற உண்மையை இருவருமே மறந்து விட்டோம். ‘எங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/25&oldid=586280" இலிருந்து மீள்விக்கப்பட்டது