பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. இளமையும் கல்வியும்

ஆறு இடும் மேடும் பள்ளமும் போலச் செல்வம் ஒருகால் பெருகுதலும் குறைதலும் உலகில் காணக் கூடியதே. அதிலும் பெருஞ் செல்வக்குடியினர் பலர், தம் பழம்பெருமையாலும், உழைப்பின்மையாலும், முறைகேடான செலவுகளாலும் தீரா வறுமைக்கு ஆட்பட்டுத் திண்டாடுவதும் அறிந்ததே.

‘குடைநிழல் இருந்து குஞ்சரம் ஊர்ந்தோர்

நடைமெலிந் தோரூர் நண்ணினும் நண்ணுவர்’

என ஒரு மன்னன் பாடியதுண்டு. ஏழுர் சமீன்தாரின் வழிவந்த பங்களா வீட்டார்க்கும் வறுமை சூழ்ந்தது. ஆகலின் பிழைப் புக்கு ஏற்ற தொழில் செய்வதற்காக முனிசாமி முதலியார் தம் குடும்பத்துடன் வடார்க்காடு மாவட்டத்தில் பெரும் வாணிக மையமாக விளங்கும் திருப்பத்துார்க்குச் சென்றார். இவ்வூர் முனிசாமி முதலியார்க்குத் திருவினைத் தந்தது. தீந்தமிழ்க்குத் திருவாகிய மு. வ. வையும் தந்தது.

பிறப்பு :

மு. வ. வின் தந்தைவ்ழிக் குடும்பத்திலும் சரி, தாய்வழிக் குடும்பத்திலும் சரி ஆண்மக்கள் மிகுதியாகப் பிறந்தனர் அல்லர். அம்மாக்கண்ணு அம்மாள் வயிற்றில் பிறந்த முதல் இரண்டு குழந்தைகளும் பெண்களே. ஆதலால், காஞ்சிமாநக ரில் பிறந்தவரான அம்மாக்கண்ணுவின் அன்னையார் நரசம் மாள், காஞ்சி வரதராசப் பெருமானிடம் ஓர் ஆண்மகவு அருள வேண்டித் தவங்கிடந்தார். பின்னர் ஒருமுறை திருவேங்கட மலைக்குச் சென்று வழிபட்டார். ஓர் அடுப்பை மூட்டினர். பிள்ளை பிறந்தால் மேற் கொண்டு வந்து உரிய வழிபாடுகளைச் செய்வதாகவும், மூட்டிவைத்த அடுப்பை எடுத்து வைப்பதாகவும் உறுதி கொண்டார். அவ்வுறுதி பிழையாவண்ணம், தமிழகத்

பெ. மு. வ.-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/29&oldid=586287" இலிருந்து மீள்விக்கப்பட்டது