பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 பெருந்தகை மு. வ.

தின் தவப்பயணுக 1912 ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்கள் இருபத் தைந்தாம் நாள் மு. வ. பிறந்தார்.

திருவேங்கடம் :

வேலத்தில் சீரும் சிறப்புமாக வாழ்ந்த பெரிய பாட்டனர் வரதராச முதலியார் பெயர் விளங்க வரதராசன் எனப் பெயர் சூட்டினர். ஆனல், ஏழுமலை சென்று பிள்ளைவரம் வேண்டிப் பெரும்பாடு கிடந்த பாட்டியார், ஏழுமலையான் பெயராகிய ‘திருவேங்கடம்’ என்ற பெயரையே பேரனுக்கு வைத்து மகிழ்ந் தார். அப் பெயராலேயே தம் பேரனை அழைத்து மகிழ்ந்தார். பாட்டனர் பெயர் பள்ளிப் பெயராக இருந்தது. வீட்டுப் பெய ராகத் திருவேங்கடம் என்பது விளங்கியது.

செல்வப் பிள்?ள :

தமிழ் நாட்டின் செல்வப்பிள்ளையாக விளங்கப்போகும் மு. வ., மூன்று குடும்பங்களுக்கு ஒரே செல்வப்பிள்ளையாகத் திகழ்ந்தார். பெரிய பாட்டனர், சிறிய பாட்டனர், தாய்வழிப் பாட்டர்ை ஆகிய மூவர் குடும்பங்களுக்கும் மு. வ. ஒருவரே ஆண்மகவு என்றால், அவரை எப்படிப் பாராட்டி வளர்த்திருப்பர்! பெருமாளினிடம் பிள்ளைவரம் வேண்டிக் கிடந்த பாட்டியார் நரசம்மாள், எத்தகைய அன்போடு வளர்த்திருப்பார் !

இரண்டு பெருமக்கள் :

o மு. வ. வின் வாழ்வில் இரண்டு பெரியவர்களுக்குச் சிறந்த இடம் உண்டு. அவருள் ஒருவர், அவரை வளர்த்துப் பரிவு காட்டிச் சீராட்டிய அருமைப் பாட்டியார் நரசம்மாள். மற்றாெருவர் அவரை இளமையிலேயே இனங்கண்டு எழுத்துலக வேந்தராக விளங்குதற்கு வழிகாட்டிய ஒளிவிளக்கு திரு. வி. க. அவர்கள்.

தரசம்மாள் பேரன் மு. வ. மேல் வைத்திருந்த அன்பும், மு. வ. பாட்டியார் மேல் வைத்திருந்த உருக்கமும் விடுதலையா?? என்னும் கதையுருக் கொண்டு வெளிப்பட்டது. கொள்ளிடமும் காவிரியும் கூடிநிற்பது போன்ற அன்பு வெள்ளத்தை, அக் கதையிலே படிப்போர் உருகிப்போவர் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/30&oldid=586288" இலிருந்து மீள்விக்கப்பட்டது