பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையும் கல்வியும் 19

‘அப்போது முதிய அம்மையார் ஒருவர் தம் பேரனை அழைத்துக்கொண்டு அணிவகுப்பில் நுழைந்தார். அம்மை யார்க்கு நரை வந்துவிட்டதே அல்லாமல் இன்னும் திரை வர வில்லை. மூப்பு என்று சொல்லிவிட இயலாது. ஆலுைம் அவர் நிலையினைக் கூற வேறு சொல் இல்லையாகையால் மூப்பின் தொடக்கம் எனலாம். வயது ஐம்பதுக்கு மேற்பட்டிருக்கலாம். சிவந்த மேனியும் கட்டுத்தளரா யாக்கையும், எளிய உடையும் ஒருவகை வீறு அளித்தன. கண்களின் கலக்கமற்ற ஒளி, உள்ளத்தின் தெளிவை வெளியாக்கிற்று. நடையில் பெண்மை யும் வீரமும் ஒருங்கே குடிகொண்டிருந்தன. பிரான்சு நாட்டில் வாழ்ந்து வீரப்போர் புரிந்து தீக்கு இரையாகிய ஜோன்’ என் னும் அம்மையார் இன்னும் 30 ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருந் தால் அவரை இந்த அம்மையாருக்கு உவமையாக்கிக் கூறலாம். ‘ஜோன் ஒரு நாட்டைக் காக்க வாழ்ந்தவர். நரசம்மா என்னும் இந்த அம்மையாரோ ஒரே பேரனைக் காக்க வாழ்ந்தவர். ‘

‘நான் வளர்ந்து இருபதாண்டு இளைஞன் ஆனேன். பாட்டியாரும் வளர்ந்து அறுபத்தைந்தாண்டு கிழவியானர். நரைமட்டும் இருந்த நிலை மாறித் திரையும் வந்துற்றது; நடை யில் தளர்ச்சியும் பேச்சில் சோர்வும் வந்துற்றன. என் மனம் வளர்ந்தது. ஆளுல் பாட்டியாரின் மனம் வளரவில்லை. அன்பு மனத்திற்கு வளர்ச்சி என்பதே இல்லைபோல் தெரிகிறது. பாட்டியாருக்கு நான் இன்னும் ஆருண்டுள்ள சிறுவனுகவே இருந்தேன். இருபதாண்டு நிரம்பியும் அவருக்குச் சிறுபைய ஞகவே தோன்றினேன்.’

மு. வ. இளமைக்காலத்தில் மெலிந்த யாக்கையராய் இருந்தார். அப்பொழுது பாட்டியார் தம் மெலிந்த உடலைப் பேணிக்காத்த பெற்றியைக் குறிப்பிடுகின்றார் மு. வ.

‘நான் வாந்தி எடுத்துப் பல ஆண்டுகள் ஆகியிருக்கும். வாந்தி எடுத்துச் சோர்ந்து தலை சாய்ந்திருந்த நிலையில் என்

r. sooaavur ? La. 12-13; 33. - ---

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/31&oldid=586289" இலிருந்து மீள்விக்கப்பட்டது