பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 பெருந்தகை மு. வ

இளமையை நினைத்துக் கொண்டேன். என் உடம்பு பித்த உடம்பு என்று பாட்டியார் அடிக்கடி சொல்வார். அடிக்கடி பித்தம் மிகுந்து வாந்தி எடுத்த நாட்கள் நினைவுக்கு வந்தன. அருமைப் பாட்டியாரின் அன்புக்கைகள் இரண்டும் அப்போ தெல்லாம் என் தலையை இறுக்கிப் பிடித்துக் காப்பா ற்றின.’

மு. வ. வின் இளமைக் காலம் பெரும்பாலும் திருப்பத் தூரில் கழிந்தது. திருப்பத்தூர் நகராட்சித் தொடக்கப் பள்ளி யிலும் உயர்நிலைப் பள்ளியிலும் முறையே தொடக்கக் கல்வியும், உயர்நிலைக் கல்வியும் பெற்றார்.

ஆசிரியர்கள் :

தொடக்கப் பள்ளியில் மு. வ. அவர்கள் பாலப்பிள்ளை என்ற ஆசிரியரிடம் பயின் ருர். அமைதியே உருவானவர் ஆசிரியர் பாலப்பிள்ளை. இளமையில் மு. வ. வை நன்கு உருவாக்கிய பெருமை அவர்க்கு உண்டு. அவ் வண்ணமே உயர்நிலைப் பள்ளியில் மேலும் சிறப்பாக மு. வ. வை உருவாக் கிய பெருமை முருகைய முதலியார்க்கு உண்டு. மு. வ. வைத் தமிழ் படிக்கத் துாண்டி, மாலை வேளைகளில் முருகன் கோயில் முன்றிலில் சில நூல்களைக் கற்பித்தார். அப்பொழுது முருகைய முதலியாரால் ஊன்றப் பெற்ற தமிழ்வித்து, மு. வ. அவர்களைத் தாமே தமிழ் பயின்று மின்னலிட வைத்தது!

மு. வ. வின் ஆசிரியர்களுள் மற்றாெருவர் திருவேங்கடத் தையங்கார் என்பார். அவர் கணக்கு ஆசிரியர். மிகத் தேர்ச்சி யாளர்; கற்பிக்கும் ஆற்றல் மிகுந்தவர். அதனினும் மு. வ. வின் மேல் தணியாத அன்பு செலுத்தியவர். நூற்றுக்கு நூறு மதிப் பெண் கணக்கில் பெறுமாறு மு. வ. வின் திறனை வளர்த்தவர். மு. வ. வின் கணக்குப் பாடத் தேர்ச்சி அவரைப் பொறியியல் போன்ற துறைகளுக்கே ஈர்த்திருக்க வேண்டும். அத் துறைக்கு அவ்வளவு சிறப்பும் உண்டு. ஆயினும் அவர்தம் ம ள்ளத்தின. ஆழத்தில் பதிந்திருந்த தமிழ் ஆர்வமே தலைதுாக்கி நிற்பி தாயிற்று.

1. யான் கண்ட இலங்கை. பக். 79.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/32&oldid=586290" இலிருந்து மீள்விக்கப்பட்டது