பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையும் கல்வியும் 21

இலக்கண வகுப்பு :

‘யான் ஆரும் வகுப்பில் கற்றபோது எனக்குத் தமிழ் இலக்கணம் கற்பித்தவர் கணக்கு ஆசிரியர். அவர் தமிழ் கற்றுத் தேர்ந்தவர் அல்லர்; வடமொழியைப் பாடமாகக் கொண்டு தேர்ந்து கணக்கு ஆசிரியராக வந்தவர். ஆயினும் தமிழ் வகுப்பு அவரைத் தமிழ் கற்கத் துாண்டியது. அவர் நடத் திய வகுப்பில் இலக்கணப்பகுதி வரும்போதெல்லாம் மான வர்க்குப் பேரச்சம் ஏற்படும். இலக்கணக் கேள்விகளுக்கு நன்றாக விடை எழுதுவோர்க்கு நல்ல மார்க்குத் தருவேன். அப்படித்தான் இவன் என்னிடம் 60, 65 என மார்க்கு வாங்கு கிருன்’ என்று மற்ற மாணவரிடம் கூறுவார். ஆளுல் யான் தவறு செய்யும்போதெல்லாம் தண்டனையும் இரட்டிப்பாகத் தருவது அவர் வழக்கம்.

‘ஒருநாள் இலக்கண வகுப்பில் வாக்கியங்கள் பலவற் றிற்கு எழுவாய் பயனிலை கூறிவந்தனர் மாணவர். எனக்கு முன் நான்காம் வரிசையில் உள்ள மாணவனுக்கு முறை வந்தது. அவனால் மணலைக் கயிருகத் திரிக்க முடியாது ‘ என்பது அவனுக்குக் கொடுத்த வாக்கியம். அவனுல்-எழு வாய்’ என்றான் அவன். மணலை-எழுவாய்’ என்றான் அடுத் தவன். ‘கயிருக’ என்றான் மற்றாெருவன். திரிக்க-எழுவாய்’ என்றேன். யான். எல்லோருக்கும் பிரம்பால் ஒவ்வோர் அடி கிடைத்தது. எனக்கு மட்டும் அன்று மூன்று அடி கிடைத்தன. “கண்ணை மூடிக்கொண்டு அந்த வாக்கியத்தில் உள்ள ஒவ் வொரு சொல்லையும் எழுவாய் எழுவாய் என்கிறீர்களா ?” என்று சினந்தார் ஆசிரியர். நீயும் அவர்களைப்போல் ஆகி விட்டாய்’ என்று வெகுண்டார் என்னை. அவன் என்பது தோன்றா எழுவாய்’ என்று அவரே விடை கூறினர்.

‘யான் கண்ணை மூடிக்கொண்டு சொல்லவில்லை. ஆசிரியர் கற்பித்த முறையே சென்றுதான் எழுவாய் கண்டேன். முதலில் பயனிலை காணவேண்டும் என்றும் அது பெற்ற பிறகு, எவர் எது முதலிய கேள்விகளை எழுப்பி விடையாக வருவது எழுவாய் எனக் கொள்ள வேண்டும் என்றும் அந்த ஆசிரியரே எனக்குக் கற்பித்திருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/33&oldid=586291" இலிருந்து மீள்விக்கப்பட்டது