பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 பெருந்தகை மு. வ.

‘முடியாது பயனிலை என்று கண்டேன். எது முடியாது என்று கேட்டேன். திரிக்க முடியாது என்று விடை வந்தது. திரிக்க-எழுவாய் என்று கூறினேன்; மூன்று அடி பெற்றேன். ஆசிரியர்பால் எனக்குச் சிறிதும் வெறுப்பு இல்லை. அவர் 60, 6 என உயர்ந்த எண்களும், தவறியபோது இரட்டிப்புத் தண்ட னையும் கொடுத்த கொடையே என்னை இன்று தமிழ்க் கடலுள் திளைக்கச் செய்துள்ளது என நினைந்து நன்றியுடையேளுகும் போது என் உள்ளம் குளிர்கின்றது.’

தமிழ் வகுப்பு :

கணக்குப் பாடத்தில் தேர்ச்சிமிக்க மு. வ. தமிழ்ப் பாடத் தின் மேல் பேரன்பு கொண்டார் ; தமிழ் வகுப்பைப் பெரிதும் விரும்பினர் தமிழ் கற்பித்த ஆசிரியர்பால் வயப்பட்டார். வயப்பட்டு ஆழ்ந்த பேர்அன்பு செலுத்துமாறு தமிழாசிரியரும் வாயததாா.

“ஆறு மாதத் தேர்வு முடிந்தது; விடுமுறையும் கழிந்தது; பள்ளிக்கூடம் திறந்த நாள் அது. மாணவர்கள் மகிழ்ச் சியோடு ஒருவரை ஒருவர் கண்டு அளவளாவிஞர்கள். மணி அடித்தது. எட்டாம் வகுப்பில் நானும் மற்றவர்களும் விரைந்து போய் ‘இடம் பிடித்து இருந்தோம். தமிழ் ஆசிரியர் வந்தார். உயர்ந்த பண்புகளுக்கெல்லாம் உறைவிடமான அவரைக் கண்டதும் எங்கள் மகிழ்ச்சி தெய்வத்தன்மை பெற்றுவிட்டது. வழக்கம் போல் முன்னுரையாக இன்மொழி பேசித் தமிழமுது ஊட்

- * : 1

டிஞ்)ா. அழியா வாழ்வு :

மு.வ. விற்கு உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக விளங் கிய பெருந்தகை முருகைய முதலியார் என்பார். அவர் தனியே தமிழ் கற்பித்ததையும் முன்னர் அறிந்தோம். முருகைய முதலி யாரை மாணவர்கள் அனைவரும் ‘தமிழ் ஐயா” என்றே அழைத் தனர். அவர் எவ்வித ஊதியமும் எதிர்பார்க்காமல் ஆல் வ முள்ள மாணவர்களுக்கெல்லாம் வகுப்பிலே மட்டுமல்லாமல் வீட்டிலும் வெளிப்புறங்களிலும் தமிழ்ச் செல்வத்தை வாரி

---

1. மொழியியற் கட்டுரைகள் 106.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/34&oldid=586292" இலிருந்து மீள்விக்கப்பட்டது