பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. வேலம் தந்த பெருவாழ்வு

திருப்பத்துாரில் இருந்து 1931 ஆம் ஆண்டில் வேலத்திற்கு மு. வ. வந்து சேர்ந்தார். 1934 ஆம் ஆண்டுவரை மூன்றாண்டுக் காலம் அங்கே தங்கினர். அக் காலம் பொற்காலம் ஆயிற்று! மு. வ. வின் வாழ்வில் வாய்த்த பல்வேறு ஏற்றங்களுக்கும் திருப்பு முனையாக இருந்தது இந்த மூன்று ஆண்டுக் காலமும், வேலத்தின் இயற்கை வாழ்வுமேயாம்.

‘ஓய்வு கொள்ளக் கிராமத்திற்குச் சென்ற நான், ஓயாமல் இரவும் பகலும் தமிழ் நூல்களைக் கற்றேன்” என்கிறார். மு. வ. இஃது அரிய திருப்பமல்லவா !

இயற்கை வாழ்வும் இயற்கை மருத்துவமும் :

‘மனிதன் இயற்கையோடு உறவாடல் வேண்டும். காடு களிலும் மலைகளிலும் புகுந்து ஆங்காங்குள்ள இயற்கை வனப்பைக் கண்டு கண்டு மகிழ்தல் வேண்டும். செடிகளின் அழகும், கொடிகளின் அழகும், பூக்களின் அழகும், பறவைகளின் அழகும், பிற அழகுகளும் அடிக்கடி மனத்திற் படிவதால் உடலில் அழகரும்பும். கடலோரத் தமர்ந்து கடலைக் காணக் காண மகிழ்ச்சி பொங்கும். வானத்தை நோக்கினல் அழகிய நீல நிறமும், விண்மீன்களும், திங்களும் மகிழ்ச்சியூட்டும். மகிழ்ச்சி அழகை வளர்க்கும். ஆதலால் மனிதன் என்றும் இயற்கை வாழ்வை விரும்புதல் வேண்டும்’ என்றும்,

‘இயற்கையோடு இயைந்து வாழ்வோர்க்கு எவ்விதப் பிணியும் வாராது. அவர்க்கு எத்தகைய வைத்தியமும் வேண்டு வதில்லை. இயற்கையினின்றும் வழுக்கி வீழ்ந்தோரை நோய். அடர்க்கும். அவர்க்கு வைத்தியம் வேண்டற்பாலது. வைத் தியத்துள் இயற்கை வைத்தியம் பொருந்தியது. இயற்கை

SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS - -

1. தினத்தங்தி. 8-7-1968. 2. தமிழ்ச்சோல். 208.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/39&oldid=586297" இலிருந்து மீள்விக்கப்பட்டது