பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 பெருந்தகை மு. வ.

வைத்தியம் இயற்கை வாழ்வை மீண்டும் கூட்டும்’ என்று தமிழ்ப் பெரியார் திரு. வி. க் கூறும் இயற்கை வாழ்வைத் தேர்ந்தார் மு. வ. இயற்கை மருத்துவத்தை நாடினர்.

வேலத்து மலையின் இயற்கைச் சூழலில் தம் நெஞ்சைப் பறிகொடுத்தார் மு. வ. ஆறும், அருவியும், ஏரியும், குளமும் அவரை வயப்படுத்தின. மரமும் செடியும் கொடியும் இன்புறுத் தின. வயலும் சோலையும் கானும் களிப்பூட்டின. விண்ணும் மண்ணும் வியப்புறுத்தின. இயற்கையில் ஈடுபட்டுத் தோய்ந்து நோய்த்துயரை மறந்தார். இயற்கையின் அரவ%ணப்பில் நோயும் தன் குறும்பைக் காட்டாது ஒழிந்தது. உள்ளம் உடற் கட்டைக் கடந்து இயற்கைத் தெய்வத் திருக்கோயில் வழிபாட் டில் நிலைத்தபோது நோய்ப்பேய்மை தலைகாட்டவும் நாணி ஒடுங்கியது! தம் பட்டறிவு மட்டும் அல்லாமல் சான்றாேர் உரை களும் இயற்கை மருத்துவத்துக்கு அரண் செய்து நிற்பதை உணர்ந்தார். அவ்வழியே செவ்வழி எனத் துணிந்தார்.

ஒரு நண்பர் :

வேலத்தில் இருந்தபோது ஒருமுறை தம் பள்ளி நண்பராம் யோக சுந்தரம் அவர்களைக் காண்பதற்கு வேலூர்க்குச் சென் ருர். அவர் வேலூர் ஊரீசுக் கல்லூரியில் இடைநிலை வகுப்புப் பயின்று கொண்டிருந்தார்.

இளமையில் யோகசுந்தரமும் மு. வ. வும் இரவில் நில வொளியில் நெடுந்தொலை நடந்து செல்லும் வழக்கம் கொண் டிருந்தனர். யோகசுந்தரத்தின் ஊராகிய பூங்குளம் சவ்வாது மலையின் அடிவாரத்தில் இருந்த தல்ை மு. வ. அவ்வூர்க்கு அடிக்கடி செல்வது வழக்கம். அத்தகைய பொழுதுகளில் இரு வரும் சவ்வாது மலைமேல் ஏறிச் சென்று உரக்க ஒலி எழுப்பி மலை முழைஞ்சிலின் எதிரொலி கேட்டு இன்புறுவர்; மலைச் சார லில் உலவி மகிழ்வர்; காலைப் பொழு தில் மலைமேல் ஏறிச் ெ சன்று மாலை மையிருட்டுச் சூழ்ந்த பின்னரே மலையை விட்டுக் கீழே இறங்குவர்; ஒருமுறை பலாப்பழத்தை மட்டும் தின்று கொண்டு,

1. தமிழ்த்தென்றல் பக். 86.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/40&oldid=586299" இலிருந்து மீள்விக்கப்பட்டது