பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 பெருந்தகை மு. வ.

மு. வ. வின் உள்ளத்தைத் திரு. வி. க. ஆட்கொண்டது போலவே, திரு. வி. க. வின் உள்ளத்தில் மு. வ. வும் இடம் பெற்றார். இருவர் இன்ப அன்பும் படிப்படியே வளர்ந்து இணை யற்று ஓங்கின. பின்னுளில் திரு. வி. க. மு. வ. வின் புனை கதை களில் உயிரோட்டமுள்ள ஒரு படைப்பாளுர். அவர் சொற் பொழிவுகள் கதைகளில் இடம் பெற்றன. அவர் கருத்துகள் நூலில், பொதிந்து கிடந்து கவின் செய்தன. கிடைத் தற்கரிய இத் தொடர்பை வளர்த்துப் பெருக்கி வாழ்வாங்கு வாழச்செய்த பெருமை திருப்பத்துார்க்கு உண்டு. மு. வ. வுக்குத் திருப்பத் தூர் சேர்த்த திருவினுள் இதுவும் ஒன்றாம்.

வாழ்க்கைக் குறிப்பு:

வாலாஜா, இராணிப்பேட்டை, வேலூர், வெட்டுவாணம் முதலிய இடங்கட்கு யான் அடிக்கடி போவேன். கூட்டங்களில் யான் மு. வரதராஜனுரைப் பார்ப்பேன். அவர் என்னைக் கண்ட தும் ஒதுங்கி ஒதுங்கி நிற்பர். பின்னை நாங்கள் நெருங்கிப் பழகிளுேம். வரதராஜனர் முக அமைப்பு என் மூளைக்கு வேலை அளித்தது. அதைச் சிந்திக்கச் சிந்திக்க என் மூளை அவர் மூளையை நண்ணியது. நுண்ணறிவுக் கேற்ற முகம் வடிந்திருக் கிறது என்ற முடிவுக்கு வந்தேன்.

முதல் முதல் வரதராஜனுர் பேச்சை யான் வெட்டு வாணத்தில் கேட்டேன். அப்போது அவர் முக அமைப்பைப் பற்றி யான் கொண்ட முடிவை உறுதிப் படுத்தியது. அவரது எழுத்தும் பேச்சைப் போலவே இருத்தல் கண்டேன்.

  1. * MK

கூட்டம் கூடுதற்கு முன்னர்க் காலையிலும் கூட்டம் முடிந்த பின்னர் மாலையிலும் வரதராஜருைம் யானும் ஆற்றங்கரைக்குச் செல்வோம். தோட்டங்கட்குப் போவோம். இயற்கையை எண்ணு வோம்; பேசுவோம்; உண்போம். அவர் திருப்பத்துரில் வதிந்த போது இயற்கையோடியைந்த வாழ்வு அவரிடம் தானே தவழ்ந்தது’ என்று திரு. வி. க. அவர்கள் குறிப்பிட்டுரைக்கும் வாழ்வு திருப்பத்துார் தந்ததுதானே !

1. திரு. வி. க. வாழ்க்கைக் குறிப்புக்கள் பக். 808-4.

- =

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/48&oldid=586308" இலிருந்து மீள்விக்கப்பட்டது