பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பத்துர் சேர்த்த திரு 37

மங்கலமனையறம் :

வித்துவான் முதனிலை முடித்த அளவில் தானே தமிழா சிரியர் வேலையில் அமர்ந்தார் மு. வ. ஆதலால் இறுதி நிலைத் தேர்வு எழுதுதற்கும் பயின்றார். ஆசிரியப் பணியின் இடையே தேர்வுக்குப் பயில்வது அவருக்கு ஒரு தடங்கலாக இருந்தது இல்லை. அவ்வாறு இருந்திருக்குமாயின் அவர் படிப்படியே பெற்ற ஏற்றங்களைப் பெற்றிருத்தற்கு இயலாது. பணியோடு தேர் வுக்குப் பயின்று வரும் பொழுதிலேயே அவருக்குத் திருமணம் செய்து வைக்கவேண்டும் என்னும் ஆவலும் பெற்றாேர்க்கு ஏற் பட்டது. அஃது இயற்கையான ஆவலேயாம். ‘உண்பதும் உறங் குவதும் அன்றி வேருென்று அறியேன்” என்று இருப்பார்க்குக் கூடப் பெற்றாேர் உரிய வயதில் திருமணம் முடித்துப் பார்க்க வேண்டும் என்று செயல்படுவதைக் காணும்போது, இவ்வளவு நாள் பொறுத்ததற்கே பெற்றாேர்களைப் பாராட்டுதல் வேண்டும்.

மு. வ. வின் மூத்த அத்தையார் சஞ்சீவி அம்மையார் என் பவர். அவர் ஆண்மக்கள் பன்னிருவரைப் பெற்றார். பெண் மகவு ஒன்றுகூடப் பிறக்கவில்லை. இவ்வம்மையாரின் மைந்தருள் ஒருவர் சாரங்கபாணி முதலியார் என்பார். அவர் நற்பண்பு களின் உறைவிடமாக விளங்கியவர். அம்மூரைச் சேர்ந்தவர். சென்னையில் வர்ணக் கடை வைத்துச் செல்வ வளம் பெருக்கி யவர்; பொருட் செல்வத்தினும் கல்விச் செல்வத்திற்கு மிகுந்த மதிப்புத் தருபவர். இவர் அரக்கோணத்திற்கு அருகில் உள்ள நாகவேடு என்னும் ஊரை அடுத்த பத்தித்துாரில் பெண் கொண் டிருந்தார். பெண்ணின் பெயர் விருத்தாம்பாள் என்பது.

இராதா அம்மையார் :

விருத்தாம்பாள் சிறந்த அழகுடையவர்; நற்குடியில் பிறந் தவர்; செல்வமாக வளர்ந்தவர்; இவர்களின் இல்லறத்தின் பயணுக மக்கள் அறுவர் பிறந்தனர். அவர்களுள் ஆண் மக்கள் ஐவரும் பெண் மகளார் ஒருவரும் ஆயினர். பெண் மகளார் பெயர் இராதா அம்மையார். இவர் மூன்றாவது மகவாகப் பிறந் தார். இவர் பிறந்த ஆண்டு 1917 ஆகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/49&oldid=586309" இலிருந்து மீள்விக்கப்பட்டது