பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை

பேராசிரியர் சை. வே. சிட்டிபாபு, எம்.ஏ., பி.டி., அணவேந்தர், மதுரைப் பல்கலைக்கழகம்

‘வரலாறு’ மனித முன்னேற்றத்திற்குப் படிப்பினை யாகும் தகுதி உடையது. அதிலும் வாழ்க்கை வரலாறு’ முறைப்படி எழுதப்படுமானல், மனித இன வளர்ச்சிக்கு வழிகாட்டும் சிறப்பினைப் பெறும். கற்பனையில் முகிழ்க்கும் கதைகளைவிட, உண்மை களில் மலரும் வாழ்க்கை வரலாறு’ வாழ்க்கை அனுபவங்களை நேரடியாக உதவி, மனிதனை நல்வழிப்படுத்தும் ஆற்றலுடையதாகிறது.

ஆங்கிலத்தில் பேரறிஞர் பாஸ்வெல் எழுதிய டாக்டர் ஜான்சனின் வாழ்க்கை வரலாறு’ ஒப்புயர்வற்றது; மிகப் பெரியது. காந்தியடிகள் படைத்துதவிய தன் வரலாறு’ ஈடிணையற்றது; ஒளிமயமானது.

இவ்வகையில் மக்களனைவரும் எடுத்துக் காட்டாகக் கொள்ளக்கூடிய அரிய பல திறன்களும் பண்புகளும் படைத்த டாக்டர் மு. வ. அவர்களின் வாழ்க்கை வரலாறு இந் நூல் வடிவில் வெளிவருகிறது. மு. வ. அவர்களுடன் மாணவராகவும், உடசிைரியராகவும், அணுக்கமாய், உட னுறை வாழ்வு பெற்றவர் டாக்டர் சி. பாலசுப்பிரமணியம். அவர் இந்நூலினைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் யாத் துத் தந்திருத்தல் போற்றுதற் குரியதாகும். ‘நம்மைப் பார்த்துப் பிறர் கற்குமாறு, நாம் ஒரு நூலகம்போல் பயன் படுவோம்’ என்பது மு.வ. வின் திருவாக்கு அதற்கேற்ப இந்நூல் எளிமையும் அருமையும் பொருந்தச் செப்பமாய் அமைந்து, அனைவரும் கற்றுப் பெருமையுறுமாறு, நன்கு எழுதப்பெற்றுள்ளது. ‘பெருந்தகைமை பெருந்தகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/5&oldid=586310" இலிருந்து மீள்விக்கப்பட்டது