பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருந்தகை மு. வ.

soto sou s gimsir@tb.’ (Nobleness Enkindleth Nobleness) என்பர் மேனுட்டுக் கவிஞர். அதேபோல், தாமும் பெருந்தகைமையுடன் வாழ்ந்து, பிறரையும் அவ்வாறு வாழத்துாண்டிய சான்றாேர் மு.வ. அவர்தம் வரலாற்றினை இளமை தொட்டு இறுதிவரை பத்துத் தலைப்புகளில் இந் நூல் விளக்குகிறது. அவரது நாட்காலைக் கடனுற்றும் பழக்க வழக்கங்கள், அயரா உழைப்பு, எழுத்தாற்றல், இயற்கை மருத்துவப்பற்று, தெளிவுடைமை, கண்டிப்பு எல்லாமே செவ்வனம் தீட்டப்பட்டுள்ளன. பின்னினைப் பாக மு.வ. வின் சில கடிதங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

ஒரு பெருந் தகையாளரைப் பற்றி எழுதுகிற நினை வோடு இந் நூலில் நிகழ்ச்சிகள் விவரிக்கப்பட்டுள்ளன. அகல் விளக்காய்த் தோன்றிக் குன்றின்மேலிட்ட விளக்காய்த் திகழ்ந்த ஒளிவளர் விளக்கா’கிய மு. வ. வின் பொலிவினை நினைவூட்டும் மொழிநடையும், கருத் தோட்டமும் இந் நூலினை அணிசெய்கின்றன. யாண்டும் மிகைபடக் கூறலுக்கு இடமளிக்கவில்லை. எளிமையின் ஏற்றம், படிப்பின் உயர்வு; உழைப்பின் உறுதி, கலைஞனின் ஆற்றல், பண்பாளரின் சான் ருண்மை என இவை இந் நூலைப் படித்து முடித்ததும் நம் நெஞ்சில் நின்று ஒளி வீசு கின்றன. டாக்டர் மு. வ. அவர்களின் நூல்களைப் பெரிதும் வரவேற்று மகிழ்ந்த தமிழகம், அவரது வாழ்வையே படிப் பினைக்கேற்ற நூலாக்கித் தரும் இதனையும் ஏற்றுப் போற்றும் என்பது உறுதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/6&oldid=586321" இலிருந்து மீள்விக்கப்பட்டது