பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப்பக் கார் சேர் ச் 39 ருபபததுா தத திரு

போற்றத்தக்க வாழ்க்கைத் துணையாக அமைந்த அருமைப்பாடு பெருமைப்படத் தக்கதாம்.

திருமணக் குறுக்கீடு :

மு. வ. இராதா அம்மையார் திருமணமும் குறுக்கீடு இல் லாமல் முடிந்து விடவில்லை. இராதா அம்மையாரின் அன்னை யார் தம் மகளை மு. வ. வுக்கு மணம் செய்துதர விரும்பினர் அல்லர். அவருக்கு இரண்டு தடைகள் தோன்றின.

ஒன்று மு. வ. வின் வீட்டார் அனைவரும் இரண்டு இரண்டு மனைவிமார்களை உடையவர் என்பது. ஆம்! தம் மகள், புகுந்த வீட்டில் போராட்டம் நடத்திக் கொண்டு வாழ்வதை எந்த அன்னையார் உள்ளம்தான் விரும்பும்? உரிமையற்ற வாழ்வில் தம் மகளை ஒப்படைக்க அவருக்கு மனமில்லை. இஃது அவர் தம் மகள்மேல் கொண்ட காதலால் எழுந்த தடை. ஆனல், மகள் மேல் வைத்த காதலால், மு. வ. இரண்டு மனைவிகளை உடை யவர் ஆகிவிடுவார் என்று அவர் கணக்குப் போட்டது தவறே யாகும். மற்றாெரு காரணம், மு. வ. வின் குடும்பம் செல்வச் செழுமை அற்றது என்பது. வளமாக வாழ்ந்த மகளை எளிய வாழ்வில் தள்ள அவர் அறவே விரும்பவில்லை. அவர் செல்வக் குடும்பத்தில் பிறந்ததும், செல்வச் செருக்கிலே செம்மாந்து இருந்ததும், புகுந்த வீடும் செல்வச் செழிப்பு மிக்கதாக அமைந் திருந்ததும் அவருக்குச் செல்வத்தைத் தான் வாழ்வாகக் கருத வைத்ததே அன்றிக் கல்வியையோ பண்பாட்டையோ கருத விடவில்லை. செல்வம் என்பது சிந்தையின் நிறைவே’ என் பதையும், ஒன்றன் கூறு ஆடை உடுப்பவர் ஆயினும் ஒன்றினர் வாழ்க்கையே வாழ்க்கை’ என்பதையும் அவர் அறியார். அவர் தம் செல்வ வாழ்வு அறியவும் விடாது. இத்தகைய நிலைமையிலும் இராதா அம்மையார் மு. வ. திருமணம் தடைப் படாமல் நடந்தது என்றால், இராதா அம்மையாரின் தந்தையார் மு. வ. வின் மேல் கொண்டிருந்த நல்லெண்ணமே காரணம் ஆகும்.

திருமண நிறைவேற்றம்:

இராதா அம்மையாரின் தந்தையார் ஆகிய சாரங்கபாணி முதலியார் தம் மக்களைக் காட்டிலும் மு.வ. வின் மேல் பேரன்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/51&oldid=586312" இலிருந்து மீள்விக்கப்பட்டது