பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 பெருந்தகை மு. வ.

கொண்டிருந்தார். மு.வ. வினிடம் அமைந்திருந்த கல்வி விளக் கமும், பண்பு நலமும் அவரைப் பெரிதும் வயப்படுத்தின. , எனவே தம் மகளாரை அவருக்கே மணம் செய்து தர விரும்பி ஞர். ஆனல், தம் மனைவியாரைத் தம்வழிக்குக் கொண்டுவர இயலவில்லை. தம் அன்பு மகளாரைத் தம் சொல்வழி நிற்கச் செய்வது அவருக்கு எளிதாயிற்று.

மு.வ. வை முன்னரே நன்கு அறிந்தவர் அல்லரோ இராதா அம்மையார்? அதனுடன் தந்தையின் ஆர்வமும், அவர்க்கு மணஞ்செய்து தருவதிலேயே இருக்கிறது என்பதையும் உணர்ந்தார். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ என்னும் பொன் மொழிப்படி மு. வ. வை மணம் செய்து கொள்ள இசைந்தார்.

மு.வ. பள்ளியிறுதி வகுப்பு முடித்தவர். வித்துவான் தேர் வும் எழுதி ஆசிரியப்பணியில் இருப்பவர். ஆதலால் ஆர்க் காட்டில் இருந்த செல்வர் ஒருவர் தம் மகளாரை மு.வ. வுக்கு மணம் செய்து தர ஆர்வம் கொண்டிருந்தார். ஆளுல் மு.வ. வின் சிறிய தந்தையார் முத்துசாமி முதலியார் இராதா அம்மையா ரையே மணம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

இவ்வாருக மு.வ. இராதா அம்மையார் திருமணம் 1985 ஆம் ஆண்டு தைத் திங்கள் 23ஆம் நாள் வேலம் பங்களா வீட்டில் சிறப்பாக நடைபெற்றது.

திருமண எளிமை :

இந்தத் திருமணத்திற்கு மாமனர் மாப்பிள்ளையின் உடைக் கென்று ஐம்பது ரூபா தந்தார். ஆனல் மு.வ. அதில் முப்பது ரூபாவுக்குக் கதராடை வாங்கிக் கொண்டு இருபது ரூபாவை மாமனரிடமே திருப்பித் தந்துவிட்டார்.

இராதா அம்மையாரின் அன்னையார் விருத்தாம்பாள் வேலத் தை அடுத்துள்ள அம்மூரிலே இருந்தும் திருமணத்திற்கு வர வில்லை. அவரைச் சார்ந்த உறவினரும் வரவில்லை. இறுதி வரையிலும் விடாப்பிடியாகவே இருந்துவிட்டார். ஆயினும் சாரங்கபாணி முதலியார் திருமணத்தை மிகச் சிறப்பாக நடத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/52&oldid=586313" இலிருந்து மீள்விக்கப்பட்டது