பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பத்துார் சேர்த்த திரு 41

வைத்தார். மு.வ. வின்மேல் அவர் வைத்திருந்த பற்றும் பாச மும் அத்தகையது! =

‘அன்பு நாண் ஒப்புரவு கண்ணுேட்டம் வாய்மையென் றைந்துச்ால் பூன்றிய தூண்’ ஆக விளங்கிய மு.வ. வின் இல் வாழ்க்கைச் சீர்மையை எடுத்துரைக்க வேண்டுவதில்லை. இராதா அம்மையாரும் மு.வ. வும் ஈருடலும் ஒருயிருமாக அமைந்து இல் லறம் நடத்தினர் என்று சுருங்கக் கூறலாம். பெண்ணுரிமை பேசும் மு. வ. அவர்கள் பெயருரிமை பேசுவதைக் கேட் போம் :

பெண்ணுரிமை :

‘வரதராசன் என்பவனை மணந்த ராதா என்பவள், தன் பெயரை ராதா வரதராசன் என்று மாற்றுகிருள். அதையும் சுருக்கி ரா. வரதராசன் என்று அமைக்கிருள். நேற்று வரையில் ராதா என்று கையெழுத்து இட்டு வந்தவள் திருமணமானதும் அன்றே ரா. வரதராசன் என்று கையெழுத்திடுகிருள். அவள் பெண்பால். ஆனல் அவள் பெயரோ ஆண்பாலுக்குரிய ‘அன்’ விகுதி உடையதாக வரதராசன் என்று கையெழுத்தில் உள் ளது.

இது புதிய முறை: ஆங்கில நாட்டாருடன் பழகிப் பழகி அவர்களைப் பார்த்துக் கற்ற முற்போக்கான முறை. பெண் பெயர் ஆண் பெயராக மாறும் இந்தச் சீர்திருத்த முறை பெண் ணுரிமை அற்ற பழங்காலப் பழக்கத்தினையே புலப்படுத்துகிறது. தன் பெயரால், தான் வாழும் உரிமையும் இல்லாத ஒருநிலை யைக் காட்டுகிறது. அல்லது, மகளாக வாழ்ந்த அடிமை வாழ்வு தொலைந்தது என்று அந்தப் பழைய பெயரை மாற்றி யமைத்ததாகக் கூறலாம். ஆனல் அவ்வாறு கூறுவதற்கு இடம் இல்லை. ஏன் எனின், புதியபெயர் தன் உரிமைப் பெயராக இல்லாமல் வேறொருவனுடைய பெயராகவே உள்ளது.

இல்லறத்தார் ஒருவர் துறவியாகும் போது தம் பழைய

பெயரைத் துறந்து, புதிய பெயரை ஏற்கிறார், அதில் உரிமை உள்ளதுபோல், பெண்ணின் பெயர் மாற்றத்தில் உரிமை மணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/53&oldid=586314" இலிருந்து மீள்விக்கப்பட்டது