பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பத்துார் சேர்த்த திரு 4 &

தேறிஞர். திருப்பனந்தாள் காசிமடத்தினர் தமிழ்'முதன்மைக்கு வழங்கிய 1000 ரூபா பரிசைப் பெற்றார். தனியே கற்றுத் தனி முதன்மை பெற்றமை எத்துணைப் பாராட்டுக்குரிய செய்தி!

வித்துவான் தேர்வுக் குழுவின் தலைவராக இருந்தவர் தமிழ்த் தாத்தா டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர். அதன் உறுப் பினர்களுள் ஒருவர் பண்டிதமணி கதிரேசன் செட்டியார். ‘புல மிக் கவரைப் புலமை தெரிதல் புலமிக்கவர்க்கே புலம்ை’ என் பது புலப்படத் தேர்வு முடிவு வெளியாயினமை மு.வ. வின் உற். ருர் உறவினர் அன்பர் நண்பர் ஆகிய அனைவருக்கும் இறும்பூ தாற் பெரிய செய்தியாகி வியப்புறுத்திற்று. தாம் பெற்ற முதன்மை குறித்து மு.வ. வே வியப்புற்றார் எனின், மற்றையோர் வியப்பைக் கூறுதல் வேண்டுமோ?

‘வித்துவான் என்னும் தமிழ்த் தேர்வுக்குச் சென்றேன். அதில் முதல் வகுப்பில் முதல்வகைத் தேறி ரூ. 1000 பரிசு பெற். றேன். அந்தச் செய்தி வந்தபோது என்னல் நம்பவே முடிய வில்லை. கணக்குப் பாடத்தில் முதல்வகை இருந்ததுபோலவே. தமிழிலும் இந்தச் சிறப்புக் கிடைத்தவுடன் என்மனம் மற்றத் துறைகளை மறந்து தமிழையே போற்றியது’.

இயல்பாகவே தமிழ்ப் பற்றுடைய மு.வ. வை இம்முதன் மையும், பரிசும் மேலும் அழுத்தமாக ஊன்றி நிற்கச் செய்தன. என்பது வெளிப்படை. அகத் துாண்டல்களே அன்றிப் புறத் துாண்டல்களும் பொலிவுறுத்தும் என்பதற்கு இந் நிகழ்ச்சி எடுத்துக் காட்டாகும்.

தேர்ச்சிமிக்காரைப் பாராட்டுதலால் அவர் மேலும் ஆர்வம் குன்றாமல் அத்துறையில் செல்வதற்கு வாய்ப்பும், பிறரும் அவ்: வழியில் செல்வதற்கு ஓர் அரிய துாண்டுதலும் உண்டாதல் இயற்கை. இதல்ை மு. வ. பெற்ற முதன்மை வெற்றியைத் திருப்பத்துார் வட்டார மக்கள் விழாவெடுத்துப் பாராட்ட விழைந். தனா.

1. தினத்தந்தி 8.7.1968.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/55&oldid=586316" இலிருந்து மீள்விக்கப்பட்டது