பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-44 பெருந்தகை மு. வ.

பரிசளிப்பு விழா :

30-11-135 ஆம் நாள், பரிசளிப்பு விழா வேலூரில் நிகழ்ந் தது. வடார்க்காடு மாவட்ட ஆட்சியாளர் திரு சாமுவேல் அரங்கநாதன் தலைமை ஏற்றிருந்தார். திருப்பத்துார் வட்டாரப் பெருமக்கள் திரளாகக் குழுமியிருந்தனர். வேலூர் நகரப் பெரு மக்களும் கூடியிருந்தனர். அவர்களுள் மாசிலாமணி முதலியார் என்பவர் ஒருவர் ஆவர். அவர் தெய்வ சிகாமணி முதலியார் என்னும் பள்ளி ஆசிரியர் ஒருவருடன் வந்திருந்தார். அவர்தம் வருகை மு. வ. வின் எதிர்கால வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற் படுவதற்கு வித்திட்டது!

நன்றிமடல் :

சான்றாேர் பாராட்டுக்கு இடமாகியிருந்த மு. வ. தமக்கு அளிக்கப் பெற்ற பாராட்டுக்குப் பதிலளித்து நன்றிமடல் ஒன்று படித்தார். அது பன்னிரு சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் ஒன்றும், அறு சீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் நான்கும் ஆக ஐந்து பாடல்களைக் கொண்டதாகும்.

‘ஓம் ‘வாழிய செந்தமிழ் !’ திருப்பனந்தாள் ரீ காசிமடத்து யூரீலழரீ காசிவாசி சுவாமிநாத தம்பிரானவர்களின் தமிழ் வித்வான் தேர்விற்குரிய ஆயிரம் ரூபாய்ப் பரிசிற் பெற்று வரிசையிற் போற்றல்’

என்னும் தலைப்பிட்டு வெளியிட்டது அந் நன்றியுரைப் பாட்டு.

‘எண்ணரிய பெருங்கொடைக்கே கடைச்சிறியேன்

எங்ஙனமோ அருக தைல் அண்ணலருள் தனை நினைந்தே அகமுருகல்

அன்றி,செயும் நன்றி யாதோ? மண்ணதனில் அன்னையொப்பான் மாட்சியருட்

புகழ்சிறக்க சிறக்க என்றே

o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/56&oldid=586317" இலிருந்து மீள்விக்கப்பட்டது