பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பத்துார் சேர்த்த திரு 45。

நண்ணரிய பரம்பொருளே நாவார

உளமார வாழ்த்து வேனே’’

இங்ஙனம்

வேலூர் -- நன்றியறிதலுள்ள, 30-11-35 வித்வான் மு. வரதராசன்

தமிழ்ப் பண்டிதர் முனிசிபல் ஐஸ்கூல் திருப்பத்துார், வட ஆர்க் காடு -என்னும் முடிப்புரையோடு நன்றிமடல் அமைந்தது.

முதன்மைப் பரிசு பெற்ற பின்னர் மு. வ. வின் புகழ். விரைந்து பரவிற்று. நெருங்கி அறியாத மக்களும் அவர்மேல் நேயம் செலுத்தினர்; மதித்துப் போற்றினர். வரதராஜி’ என்று பெயரிட்டுப் பொதுமக்கள் அழைக்கவும் தொடங்கினர் என்றால் அது பரிசு தந்த பரிசுதானே !

தமிழ்ப் பரிசு பெற்ற மறு ஆண்டிலே மு. வ. வுக்கு மற்றாெரு. பரிசு கிடைத்தது. அப் பரிசை வழங்கியவர் மு. வ. வின் கருத் தெரத்த காதன் மனைக் கிழத்தியார் இராதா அம்மையார். ஆம் ! ‘பிள்ளைக் கனியமுது'; ‘பேசும் பொற்சித்திரம்’, கலிதிர்க்க வந்த கவின் செல்வம்’ என்று பாராட்டப் பெறுமே அப் பிள்ளைப் பரிசை வழங்கினர் இராதா அம்மையார். -

அருமை அரசு :

செல்வமகனைக் கண்ட மு. வ. வின் நெஞ்சம் நாவுக்கரசர் மேல் சென்றது. தொண்டலால் துணையும் இல்லை என்று. வாழ்ந்த பெருந்தகை அவர் என் கடன் பணிசெய்து கிடப் பதே’ என்று கொண்ட ஏந்தல் அவர். ‘விளக்கினர் பெற்ற, இன்பம் மெழுக்கினல் பதிற்றியாகும்’ என்று பேசிய பெருந்தகை அவர். எண்பத்தோர் அகவையாய்த் தண்டுன்றித் தள்ளாடி நடந்தாலும், உழவாரத் திருப்பணி செய்தலில் ஓயாத திருத் தொண்டர் அவர். ஈசன் கழலிணைகளை மாசில் வீணையாய், மாலை. மதியமாய், வீசுதென்றலாய், வீங்கிளவேனிலாய், மூசுவண்டறை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/57&oldid=586318" இலிருந்து மீள்விக்கப்பட்டது