பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிவளர் விளக்கு 49

மாயினும் அதனைப் பிறர் அறியாதவாறு மறைத்துக் காத்தார். உள்ளார்ந்த அன்புடைய உழுவலன்பர்கள் உண்மை நிலை மையை உணர்ந்து தாமே வலியச் சென்று உதவி செய்யினும் அதனையும் மறுத்து விடுவார்.

பயன் கருதாப்பணி :

மு.வ. வின் பால் பேரன்புகொண்ட பெரியார் திரு. சண்முக முதலியார். அவரைப்பற்றி முன்னரும் குறிப்பிட்டுள்ளோம். அவர் இராகவன் புகழ் அறுபது முதலாய கவிதை நூல்களின் ஆசிரியர். பைந்தமிழ்ப் பற்றாளர். அவர்தம் மைந்தர் இரகுநா யகனை, மு.வ. வினிடம் தனியே தமிழ் கற்பதற்கு ஏற்பாடு செய் தார். மு.வ. வும் உவந்தேற்றுக் கற்பித்தார். இதற்கெனத் தொகை எதுவும் பெறுதற்கு மறுத்துவிட்டார் மு.வ. பெரியார் சண்முக முதலியார்க்குத் தாம் எவ்வுதவியும் செய்ய வாய்க்க வில்லையே என்ற ஏக்கம் இருந்தது. பொங்கல் திருநாள் வந் தது. அந்நாளில், தம் அன்புக்குரியவர்களுக்குப் பரிசு வழங்கு வது அவர் வழக்கம். அவ்வாறே புதிய உடையும் சிறிது பணமும் தம் மைந்தர் வழி மு.வ. வுக்கு விடுத்தார். அப்பொழுதும் மு. வ. அவ்வன்பளிப்பை ஏற்க விரும்பினர் அல்லர். ஆயினும் அன் பளிப்பை மறுப்பதால் பெரியவர் மனம் வருந்துமே எனத் தாம் வருந்தி, இந்த முறை இதனை ஏற்றுக் கொள்கிறேன். இனி, இத்தகைய முயற்சி வேண்டா; இதுவே இறுதியாக இருக்கட் டும் என்று சொல்லிப் பெற்றுக் கொண்டார். பயன் கருதாது பணி செய்யும் பான்மை இதல்ை வெளிப்படும். இத்தகைய சான்றுகள் மு.வ. வின் வாழ்வில் பலப்பல.

எளிமை போற்றுதல் :

பட்டாடையை விரும்பாதவர் மு.வ. பருத்தி ஆடையே அணி வார். எளிமை மட்டும் அதற்குக் காரணம் அன்று. உயிர் இரக்கமும் கூடிய கொள்கையாகும். ஏழை எளிய மக்கள் ஒரு வேளைக் கஞ்சிக்கும் வழியற்றுத் திரியும் நாட்டில் வாய்ப்புப் படைத்த சிலர் பட்டாடை உடுத்தியும், பொன்னணிகள் பூண் பெ. மு. வ.-4 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/61&oldid=586323" இலிருந்து மீள்விக்கப்பட்டது