பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 பெருந்தகை மு. வ.

டும் திரிவது பாவம்’ என்று பதறுவது அவர் நெஞ்சம் கோடிக் கணக்கான பட்டுப்பூச்சிகளைக் கொன்று எடுத்த நூலால் ஆகிய பட்டாடை உடுப்பது கொடுமை என்று நடுங்குவது அவர் அருள் உள்ளம். ஆகலின் பட்டாடையும் சரி, பகட்டு விளங்கும் ஆடை யும் சரி, அவர் உடுப்பது இல்லை. பொன்னும் மணியும் பட்டும் பொருட்காட்சி நிலையங்களில் காட்சிப் பொருளாக வைக்கப்படு மால்ை சமுதாயச் சிக்கல் தீர வழியுண்டு என்பது அவர் கருத்து.

பின்னுளில் குமுதம் இதழில் இவர் எழுதிய வைரமோதிரக் கதை’ ஒன்று வெளிவந்தது. அதற்கு வைரமோதிரம் பரிசாக வழங்கப் பெற்றது. அதனைத் தாம் அணிந்துகொள்ள விரும் பாமல் தம் அருமை மனைவியார் விரலுக்கு அணிவித்து அமைந் தார். அறிவால் நாளும் வளர்ந்து வந்தது போலவே பண் பாலும் வளர்ந்துவந்தார் என்பதற்குரிய சான்றுகளுள் இதுவும் ஒன்றாம்.

உளமறிந்து உதவும் உயர்வு :

ஆற்றலும் அறிவும் மிக்க மாணவர்களையும் அவர்கள் குடும் பத்துள்ள வறுமை வாட்டி வதைப்பதை அறிந்தார் மு.வ. அவர்கள் கல்வியில் கருத்தை ஊன்று தற்கு இயலாது செய்யும் இல்லாமைத் துயரை ஒழித் தற்கு வழிவகை காணமுனைந்தார். அன்னை அருளுக்கு எடுத்துக் காட்டாக அமைந்த அவர் உருகி ஞர். அல்லல்படும் மாணவர்களைத் தனியே அழைத்து அவர் தம் இடுக்கண்களை ஆய்ந்தார். தம்மால் இயன்ற அளவு உதவி செய்து கல்வி தடைப்படாவண்ணமும், இடையறவு பட்டு நிற் காவண்ணமும் காத்தார்.

இவ்வளவுடன் நின்றுவிட அவர் உள்ளம் இசையவில்லை. தகுதி வாய்ந்த நன்மக்களை அணுகி, மாணவர் நிகலயை மனங் கொள்ளுமாறு எடுத்துரைத்து அவர்கள் வழியே உதவி பெறச் செய்து மகிழ்ந்தார். தமக்கென்று தானே வரும் உதவியை வேண்டாமல் வெறுத்த மு.வ. கல்விகற்கும் இளைஞர் நலங் கருதிப் பிறர் உதவியை நாடிச் சென்றார் எனின் அவர்தம் பெரு மனமே காரணமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/62&oldid=586324" இலிருந்து மீள்விக்கப்பட்டது