பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பெருந்தகை மு. வ.

மாசிலாமணி முதலியார் செய்த உதவி காலத்தால் செய்த தாகும். அதே பொழுதில் தகுதியுணர்ந்து தாமே முந்துநின்று தேடிப்போய்ச் செய்த உதவியாகும். இத்தகைய உதவியை நன்றியறிதல் மீக்கூர்ந்த மு. வ. வின் நெஞ்சம் மறப்பதே இல்லை. தம் புனைகதை ஒன்றில் வேலூர் மாசிலாமணி முதலி யார் தெருவினைக் குறிப்பிடுகின்றார். ‘தேமொழி-சீராளர் குடும் பம் வேலூர் மாசிலாமணி முதலி தெருவில் பன்னிரண்டாம் எண்ணுள்ள வீட்டில் வாழ்கிறது’ என்பது அக்குறிப்பு. டாக்டர் இலக்குமணசாமி முதலியார் செய்த உதவியும் மு.வ. வின் நெஞ்சில் என்றும் பசுமையாகவே இருந்தது. இனி மு.வ. வின் சென்னை வாழ்வைத் தொடர்வோம்.

- m -- Hmmmm = -m =

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/68&oldid=586330" இலிருந்து மீள்விக்கப்பட்டது