பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. சென்னை வாழ்க்கை

அ. பச்சையப்பர் கல்லூரி :

மு. வ. சென்னைப் பச்சையப்பர் கல்லூரியில் திருத்தாள ராகப் பணியமர்த்தம் பெற்றார். அப்பொழுது பச்சையப்பர் கல்லூரி ஆரவாரமிக்க, சைன பசாரில் உள்ள பழைய கட்ட டத்தில் நடந்து வந்தது. தமிழ்த் துறைத் தலைவராக மோசூர் கந்தசாமி முதலியார் அவர்கள் விளங்கினர்கள்.

கந்தசாமி முதலியார்க்கு மு. வ. வின் மேல் தனியன் புண்டு. முதலியார் முதலியார்’ என்று வாயார அழைத்து மகிழ்வார். தமிழ்த்துறைப் பொறுப்புகளையெல்லாம் கவனிக்கு மாறு சொல்வார். மு. வ. வுக்கு ஒரு பட்டப்பெயர் சூட்டினர் மோசூரார். மூலவர்’ என்பது அது. இளம் பேரறிஞர்க்கு முது பேரிளைஞர் சூட்டிய இப் பட்டம் எண்ணுதோறும் இன்பம் பயப் பதாம். இருந்த இடத்திலே இருந்து அமைதியாகப் பணி செய்யும் மு. வ. வை மூலவர்’ என்று அழைக்கத் தோன்றியது அவர்க்கு. அன்றியும் கோயிலுள் மூலவர்க்கு உரிய சிறப்பினை அறிந்து மோசூரார் வழங்கிய பெருமைப் பெயர் இஃதாகும். ஆம்! மு. வ. தம் வாழ்வில் எத் துறையில் புகுந்தாலும் மோசூ ரார் வாக்குப்போல மூலவராகவே விளங்கினர் என்பது உண்மை. மு. வ. பணியேற்றுக் கொண்ட முதல் ஆண்டிலேயே பி. ஓ. எல். பட்டப் படிப்பைப் பச்சையப்பர் கல்லூரியில் தொடங்கு வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். பச்சையப்பர் பெயரால் அமைந்த அற நிறுவனங்களைப் பேணிவந்த அறங்காவலர்களைத் தனித்தனியே அணுகி பி. ஓ. எல். பட்டப் படிப்புத் தொடங்க வேண்டிய இன்றியமையாமையை வலியுறுத்தினர். அவர்களின் ஒருமித்த இசைவையும் பெற்று உவந்தார். . . மு. வ. வுக்கு ஓராண்டுகால அளவுக்கே பணி வழங்கப் பெற்றிருந்தது. ஓராண்டும் முடியும் தறுவாயில் இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/69&oldid=586331" இலிருந்து மீள்விக்கப்பட்டது