பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 பெருந்தகை மு. வ

எழுதவேண்டுமாளுல் அதற்குரிய கருத்துகளைத் தமது உள் ளத்திலே தெளிவு பெற அமைத்துக் கொண்டு எழுதுவர். அவர் கையெழுத்துப் படியை அச்சுக் கோப்பவர் அச்சுப் படியை அச் சுக்கோப்பது போல் பிழையில்லாமல் மகிழ்ச்சியோடு அச்சுக் கோப்பர். தடித்த எழுத்தில் அமைக்க வேண்டிய தலைப்புச் சொற்கட்கும் இடைநடுவில் வருகிற சிறப்புச் சொற்கட்கும் இரட்டை அடிக் கோடுகளும் ஒற்றை அடிக் கோடுகளும் இடுவர். காற்புள்ளி, அரைப்புள்ளி, முற்றுப் புள்ளி, கேள்விக் குறி, வியப்புக்குறி முதலிய குறிகளையும் தவருமல் இடுவர் அவர்கட்கு மெய்ப்பினை அனுப்புவதற்குமுன் யான் ஒருமுறை படித்துத் திருத்தியே அனுப்புவேன். அவர் மெய்ப்பில் புதுக் கருத்துகளைப் புகுத்துவதோ சொற்களை மாற்றி அமைப்பதோ பெரும்பான்மை கிடையாது’’’.

பி.ஓ.எல். வகுப்பு மாணவர்களுக்கு மொழியியல் பாடமாக இருந்தது. அதனைக் கற்பிப்பதற்குரிய நூல்கள் தமிழில் இல்லை. ஆகவே, மொழியியல் கற்பிக்க வேண்டியிருந்த மு.வ. வே மொழி யியல் நூல் எழுதும் கடமையையும் மேற்கொண்டார். கற்பிக் கும் பாடத்தை நூலாக்குவதும், நூலாக்கும் பாடத்தைக் கற் பிப்பதும் இரட்டை நன்மைகள் ஆயின. இவ்வகையில் மொழி நூல் என்னும் நூலும் மொழியியற் கட்டுரைகள் என்னும் நூலும் வெளிப்பட்டன. மொழிநூல் 1947ஆம் ஆண்டிலும் மொழியியற் கட்டுரைகள் 1954ஆம் ஆண்டிலும் வெளிவந்தன. மொழி வரலாறு என்னும் நூலும் 1954இல் வெளிவந்ததே ஆகும்.

மொழிநூல் எவ்வாறு நூல் வடிவுற்றது என்பதை மு.வ. குறிப்பிடுகிறார் :

‘சென்னைப் பல்கலைக் கழகத்து மொழிநூல் பாடத்திட்டத் தை ஒட்டி, பச்சையப்பன் கல்லூரியில் பி.ஓ.எல். ஆனர்ஸ் (B.O.L. Hons) வகுப்பிற்கு 1942இல் மொழி நூல்பாடம் கற்பிக் கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தபோது எனக்கு இந்நூலைப் பற்றிய எண்ணம் அரும்பியது. முதலில் மாணவராக இருந்த

1. செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு. 47. பக். 310-11. திரு. வ. சுப்பையாபிள்ளை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/82&oldid=586346" இலிருந்து மீள்விக்கப்பட்டது