பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை வாழ்க்கை 7 i.

திருவாளர் போ. குருசாமி, சி. வேங்கடசாமி, ச. ரகுநாயகம், சா. சீனிவாசன் ஆகியோர் அந்த எண்ணத்தை மேன்மேலும் வளர்த்து வந்தனர். யான் சொல்லியவற்றை அவர்கள் எழுதி வைத்த குறிப்புக்களே இந்நூல் வடிவு பெற்றன’’.

இன்னும் மொழிநூல் பற்றிய சில அரிய கருத்துகளை மொழிநூல் முன்னுரையிலே சுட்டுகின் ருர் மு.வ. .

பயனுள் ளது வாழும்; பயனில்லாதது வீழும்; வேண்டாத

ஒன்று தானே அழிதல் இயற்கை; இந்த அழிவும் ஆக்கம் கருதி யதே. மாறுதல் ஒவ்வொன்றும் முன்னேற்றத்தின் படியே.

இவ்வளவும் உயிர்வாழ்க்கையின் மற்றத் துறைகளில் காண ப் படுதல் போலவே மொழித் துறையிலும் காணப்படுகின்றன.

மொழியைப் பேசுவோர்க்கும் எழுதுவோர்க்கும் பினக் கும் போராட்டமும் உள்ளன. மொழியின் பழைமையைப் போற்றுவோர்க்கும் மொழியின் வளர்ச்சியை விரும்புவோர்க்கும் பகை பெருகுகின்றது. இந்தப் பிணக்கு போராட்டம், பகைமை எல்லாம் வேண்டாதவை. வீண்; இவ்வாறு உணர்த்தவல்லது மொழியின் ஆராய்ச்சியே.

இலக்கியத்தில் காண்பது மொழியின் பதிவுபெற்ற பழைய வடிவம். இலக்கணம் என்பது மொழியின் இறந்தகால நிலையை விளக்கி நிகழ்கால நிலையைச் சொல்ல முயல்வது. மொழியியல் என்பது மொழியின் வரலாற்றை விளக்குவதோடு நிகழ்கால நிலையைத் தெளிவாக்கி எதிர்காலப் போக்கையும் அறிவிக்க வல்லது’.

டாக்டர் மு.வ. அவர்களே இக்கலையை (மொழியியல்) நாடெங்கும் பரப்பிய பேரறிஞர். அவர் இத்துறைக்குச் செய்த தொண்டு அடிப்படையானது. கடைக்கால் போட்டவர் அவர் என்று கூறலாம்’ என்கிறார் மு.வ. வின் மாணவர் மொழி நூற் பேராசிரியர் டாக்டர் ரா. சீனிவாசன்.

1. மொழி நூ ல்-முன்னுரை. 2. பேராசிரியர் மு. வ. பேராசிரியர் அ. மு. ப. கருத்தரங்கக் கட்டுரைகள் பக். 14.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/83&oldid=586347" இலிருந்து மீள்விக்கப்பட்டது