பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 பெருந்தகை மு. வ.

மொழிநூல் ஒலிவகை, உயிரொலிகள், மெய்யெழுத்துக்கள், ஒலியளவு, ஒலியழுத்தம், ஒலியசை முறை, சொல்லின் திரிபு, அடிச்சொற்கள், பெயர்ச்சொல், வேற்றுமை, மூவிடப்பெயர், எண்ணுப் பெயர்கள், வினைச்சொல், வினவகை, சுட்டு முதலி யன, சொல்லும் பொருளும், சொற்றாெடர் என்னும் பதினேழு தலைப்புகளில் 296 பக்கங்களில் அமைந்துள்ளது.

பெண் அஃறிணையா?, இந்தியின் தாய், தலைச்சோறு, நிற்பது கூடாது, அடக்குமுறை, மொழிபெயர்ப்பு, ஊருடன் கூடிவாழ், செவிச்செல்வம், வல்லான் வகுத்ததே வாய்க்கால், ‘கள்’ பெற்ற பெருவாழ்வு, மனம் போன போக்கு, செல்லப்பன், கல்லாத பேர்களே நல்லவர்கள், இழப்பது ஒன்றும் இல்லை, அழகா? எளிமையா?, பெரியோர் சிறுபிழை, பெண்ணுரிமை என்னும் பதினேழு கட்டுரைகளை யுடையது மொழியியற் கட்டுரைகள்.

‘அரிய கலை’ என்பது முதலாக எண்கள்’ என்பது ஈருக

இருபத்தெட்டுத் தலைப்புகளைக் கொண்டு நானூற்று எண் பத் தேழு பக்கங்களில் நடையிடுகின்றது மொழி வரலாறு.

மக்களின் வாழ்வில் பிறந்த கலை, மொழி; மக்களால் வளர்க்கப்படும் கலை மொழி; மக்களின் வாழ்வை நாகரிகமுடைய தாக உயர்த்தி வரும் அரியகலையும் மொழியே’’’ என்று தெளிந் துரைக்கும் மு. வ. இளைஞர்களும் எளிதில் மொழியியற் கருத்து களை உணர்ந்து கொள்ளுமாறு வானெலியில் உரையாற் றினர். அவ்வுரை சிறிய சிறிய சொற்றாெடர்களில் கதைப் போக்கில் அமைந்தது. அதன் தொகுப்பே எழுத்தின் கதை’, சொல்லின் கதை’, ‘மொழியின் கதை’ என்னும் நூல்களாக வெளிப்பட்டன.

‘(தமிழ்) எழுத்துகளில் வளைவுகளும் சுழிகளும் மிகுதியாக இருப்பதற்குக் காரணம் என்ன? நம்முடைய முன்னேர்கள் பலகையிலும் காகிதத்திலும் எழுதவில்லை. பனை ஓலையில் இரும்பு எழுத்தாணி கொண்டு எழுதினர்கள். அதில் எழுதும்போது

1. மொழி வரலாறு. பச் 5.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/84&oldid=586348" இலிருந்து மீள்விக்கப்பட்டது