பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை வாழ்க்கை 7

ஒலை கிழியாமல் இருக்க வேண்டுமானல் இப்படி வளைவுகளும் சுழிகளும் இருந்தால்தான் எழுத முடியும். இப்படித்தான் எழுதப்படும் பொருளுக்கும் எழுதும் கருவிக்கும் தகுந்தபடி எழுத்து முறையும் அமைந்துவிட்டது.’ -இஃது எழுத்தின் கதை,”

அந்தக் காலத்தில் சொற்களை எப்படி ஏற்படுத்தினர்கள்? தங்கள் காதால் கேட்ட ஒலியையே திருப்பிச் சொன்னர்கள். திருப்பிச் சொன்ன ஒலியே சொல் ஆயிற்று. மரத்தில் கருநிற மான பறவை ஒன்று காகா என்று கத்தியது. அதைப்பற்றிச் சொல்லும்போது பழங்கால மனிதன் தானும் ‘காகா என்று கத்தினன். நாளடைவில் காக்கா என்ற ஒலியே அந்தப் பறவைக்குப் பெயராயிற்று.’

-இது சொல்லின் கதை,”

கோழி பேசுகிறது. கோழியாவது பேசுவதாவது. இது என்ன கதையா என்று எண்ணத் தோன்றும். ஆனல் நன்றாக எண்ணிப் பார்த்தால் தாய்க் கோழி தன் குஞ்சுகளோடு இருக்கும் போது எந் நேரமும் பேசிக்கொண்டே இருப்பது உண்மை என்று தெரியும். அது ஒரு பேச்சா, கிக் கிக் கிக் என்ற ஒலி தானே என்று எண்ணலாம். நமக்கு விளங்காத காரணத்தால் அது பேச்சு அன்று என்று தள்ளிவிடக் கூடாது. சீனக்காரன் பேசுவது நமக்கு ஒன்றும் விளங்கவில்லை. அதனுல் அது பேச்சு அன்று என்று தள்ள முடியுமா? அப்படித்தான் கோழிப் பேச்சும். அதன் பேச்சு நமக்கு விளங்கவில்லை; ஆனால், அதன் இளங்குஞ்சு களுக்கு நன்றாக விளங்குகிறதே. அவைகள் தாய் சொல்வதைக் கேட்டு அதன்படி நடப்பதைக் காணலாம். ஆகையால் அது பேச்சுத்தான்.'”

-இது மொழியின் கதை,

1. எழுத்தின் கதை பக். 35. 3. சொல்லின் கதை பக். 7. 3. மொழியின் கதை பக். 14.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/85&oldid=586349" இலிருந்து மீள்விக்கப்பட்டது