பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 பெருந்தகை மு. வ.

குழந்தை இலக்கியங்களைப் படைத்த மு. வ. பட்டப்படிப்பு மாணவர்க்கு மொழிநூல் படைத்த மு. வ. பதவியால் வளர்ந்த மு. வ. மேல்நிலைப் பட்டங்களாலும் உயர்ந்தார். கல்லூரிப் பணிகளுக்கு இடையே, எழுத்துப் பணிகளுக்கு இடையே, மேல் நிலைக் கல்விக்கெனப் பொழுதைத் திட்டப்படுத்தித் திறமாகப் பயின்று பெற்ற வெற்றிகள் பொன்னேபோல் போற்றத் தக்கன GlfITLT,

எம். ஒ. எல் :

1944 ஆம் ஆண்டில் தமிழ் வினைச் சொற்களின் தோற்ற opti suer: 3 suith’ (Origin and development of verbs in Tamil) என்பது பற்றி ஆராய்ந்தார். அதனை எம். ஒ. எல். பட்டத்திற் குரிய ஆய்வாகப் படைத்தார். மு. வ. எம். ஒ. எல். ஆளுர், அடுத்த ஆண்டிலேயே பச்சையப்பர் கல்லூரித் தமிழ்த் துறை யின் தலைவராக உயர்ந்தார்.

டாக்டர் :

1948 ஆம் ஆண்டில் பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை’ (The Treatment of Nature in Sangam Literature) grairusog. ஆராய்ந்து பிஎச். டி. (Ph.D.) பட்டம் பெற்றார், குழந்தைப் பருவமுதலே இயற்கையிடுபாடு கொண்ட மு. வ. இத் தலைப்பைத் தேர்ந்து கொண்டது இயற்கையே ஆகும். இயற் கையும் மு. வ. வும் இரண்டறக் கலந்து நின்ற தன்மைக்கு இஃதோர் எடுத்துக்காட்டேயாம்.

‘நண்பரது சென்னை வாழ்க்கை இயற்கையிலே செயற் கையைச் சேர்த்தது. அடிக்கடி நண்பரைச் சென்னையில் காண் பதில் எனக்கு இன்பம் உண்டாகிறது. அதே நேரத்தில் செயற்கையின் சேர்க்கை நினைவு தோன்றும்போது துன்பம் உண்டாகிறது. அன்பரும் சிற்சில போது வருந்துவது எனக்குத் தெரியும்’ என்று திரு. வி. க. அவர்கள் குறிப்பிடும், செயற் கையின் சேர்க்கை வாழ்வை இயற்கையோடு இயைந்த வாழ்

_ - - -

1. திரு. வி. க. வாழ்க்கைக் குறிப்புகள் பக். 804.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/86&oldid=586350" இலிருந்து மீள்விக்கப்பட்டது