பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை வாழ்க்கை 75。

வாக மாற்றத் தேர்ந்த சித்தராக விளங்கினர், மு. வ. அவ்: விளக்கமே பழந் தமிழ் இலக்கியத்தில் இயற்கை ஆய்வும், சங்க

இலக்கியம் தொடர்பான பிற ஆய்வுகளுமாம். பாலையைப் பசுஞ் சோலையாக்குவதும், பசுஞ்சோலையைப் பாழ்ப் பாலையாக்குவதும்

மனமே” என்பதை மு. வ. வின் வாழ்வை உற்றுநோக்கி உணர்

வார் உணர்வர்! கருத்துடையார் காண்டாராக.

டாக்டர் பட்டத்தை மு. வ. பெற்றார் என்றால் அதிலும் ஒரு தனிச் சிறப்புண்டு. சென்னைப் பல்கலைக் கழகத்தின் வழியே. தமிழ்த் துறையில் முதன் முதல் பிஎச். டி., டாக்டர் பட்டம் பெற்றவர் மு. வ. வே யாவர்.

பல்கலைக் கழகப் பணி :

பச்சையப்பர் கல்லூரியில் பணி செய்த மு. வ. 1948 ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றும் வாய்ப்புப் பெற்றுச் சென்றார் ஆளுல், கடற்காற்று. அவர்தம் உடல் நிலைக்கு ஏற்றதாக அமையவில்லை. ஆதலால் ஓராண்டுக் காலமே பணியாற்றிவிட்டு மீண்டும் பச்சையப்பர் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைமைப் பணிக்குத் திரும்பிஞர். மீண்டும் பச்சையப்பரில் :

பச்சையப்பர் கல்லூரிப் பணியில் மு. வ. மீண்டும் அமர்ந்தது அவருக்கு மட்டும் அன்றித் தமிழ் இலக்கியத்திற்கும், தமிழர் நல்வாழ்வுக்கும் பொற்காலமாக அமைந்தது என்பது பேருண்மையாம். அவர்தம் சிந்தனைப் பறவை சிறகடித்தும் பறந்து சீரிய பல்வேறு துறைகளில் படைப்பு இலக்கியங்களை உருவாக்கியது. மு. வ. என்னும் இரண்டு எழுத்துகளைக் கூறிய அளவில் எவரும் அறிந்து கொள்ளும் நிலையை உண்

டாக்கியது.

நூல்கள் :

பச்சையப்பர் கல்லூரிப் பசுமையில் தோய்ந்து அமைதி

கண்ட மு. வ. இலக்கிய ஆராய்ச்சி நூல்கள், வரலாற்று

நூல்கள், கடித நூல்கள், நாடக நூல்கள், சிறுகதை நூல்கள்,

புனைகதை (நாவல்) நூல்கள் எனப் பல்வேறு துறைகளில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/87&oldid=586351" இலிருந்து மீள்விக்கப்பட்டது