பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 பெருந்தகை மு. வ.

திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் என்னும் நூலை மு.வ. படைத்த நோக்க மென்ன? ‘உலகம் ஒருகுலமா தல் வேண்டும்’ என்னும் உயர்ந்த உணர்வே திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் என்னும் நூலைப் படைக்க வைத்தது.

‘இந் நூற்கண் பல இடங்களில் பொதுமையும் மனத் துய்மையும் மிளிர்கின்றன இரண்டும் நூலின் நுரை யீரல்கள்’ என்று கூறல் மிகையாகாது. இவை உலகம் ஒருகுலம்’ என் னும் உயிர்ப்பை நல்குவன’.

‘திருவள்ளுவரே திருக்குறள் ஆதலே விளக்குகிருள் ஆசிரியர் :

‘நூல் இருவகை தன் காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்வது ஒன்று. நம் காலத்திற்குத் தான் வந்து உதவுவது மற்றாென்று. நூலைக் கற்கும் முறையும் இருவகை வாழும் காலத்தை மறந்து நூலெழுதிய காலத்திற்குக் கற்பனைச் சிறகு கொண்டு பறந்து சென்று நூற்பொருளைக் கற்பது ஒருவகை. நூலெழுதிய காலம் எதுவாயினும் அதைவிட்டு வாழும் காலத் திற்கே வந்து வழிகாட்டும்படியாக நூலைப்போற்றிக் கற்பது மற். றொரு வகை. புலவருலகில் நின்று இலக்கியமாக மட்டும் போற்றப்படும் நூல்கள் முதல் வகையைச் சார்ந்தவை. இரண் டாம் வகை நூலகளோ, எல்லா மக்களுக்கும் பயன்படுவன வாய் ஆட்சிபுரியும் சட்ட நூல்களை விடச் செல்வாக்கு உடையனவாய மக்களின் உள்ளங்களே கோயில்களாய் வாழ்வன. திருக்குறள், பகவத்கீதை, கன்பூவியஸ் நூல், பைபில், குர் ஆன் முதலியன இவ்வகையைச் சார்ந்தவை. இந் நூல்களில் எழுதிய எழுத் துக்கள் மறைந்து நிற்க, அறிவுறுத்தும் சான்றாேரே முன் நிற்பர். திருக்குறளை இவ் வகையாகப் போற்றிக கற்கக் கற்கத் திருவள்ளுவர் என்னும் தமிழ்ச் சான்றாேர் முன் வந்து வழி காட்டக் காண்கின் ருேம். இது பற்றியே திருக்குறளைத் திரு வள்ளுவர்’ என்று வழங்கும் வழக்கும் காணப்படுகின்றது.’

1. அணிந்துரை. திரு. வி. க. XV11. .ே திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம். முன்னுரை XXII

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/96&oldid=586361" இலிருந்து மீள்விக்கப்பட்டது