பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

உயர்த்திப் போற்றுவது இஸ்லாம். ஒவ்வொரு முஸ்லிமும் உழைத்தே சாப்பிட வேண்டும். கடுமையாக உழைத்தே ஊதியம் தேட வேண்டும். அந்த உழைப்பு உடல் உழைப்பாகவோ மன உழைப்பாகவோ இருக்கலாம்.

அக்கால அரபு மக்களின் உடல், மன உழைப்பை அடிப்படையாகக் கொண்ட தொழிலாக வியாபாரம் அமைந்திருந்தது.

இஸ்லாமிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ‘ஹஜ்’ கடமையை இனிது முடித்த முஸ்லிம்கள் அடுத்து வரும் முஹர்ரம் மாதத்தில் வியாபாரக் கடமையை முனைப்பாக மேற்கொள்வார்கள்.

எனவே, ஆன்மீக உணர்வுக்கு அடுத்த நிலையில் உழைப்பைப் போற்றும் மாதமாக ‘முஹர்ரம்’ அமைந்துள்ளது.

புனிதமிகு முஹர்ரம் மாதத்தில் கோபம், குரோதம், வன்மம், பலாத்காரம், வன்முறை போன்ற தீய உணர்வுகை நெஞ்சத்திலிருந்து அறவே அகற்றி அன்பு, அருள், அமைதி, சாந்தம், மகிழ்ச்சி போன்ற நல்ல உணர்வுகளை நெஞ்சத்தில் நிரப்பி வாழ வழிகாட்டுகிறது முஹர்ரம்.

இம்மாதத்தில் முஸ்லிம்கள் சண்டை சச்சரவுகளில் அறவே ஈடுபடக்கூடாது; போர் செய்வதை முழுக்க விலக்க வேண்டும். எனவே, வன்செயல் உணர்வற்ற, போர் விலக்கப்பட்ட அதாவது ஹராமாக்கப்பட்ட புனிதமாதம் எனும் பொருளிலேயே ‘முஹர்ரம்’ எனப் பெயர் அமைந்துள்ளது.

இஸ்லாமிய மார்க்க அடிப்டையில் முஹர்ரம் மாதம் புனித மாதமாகக் கருதப்படுகிறது. “முஹர்ரம் மாதத்தின் முதல் நாளில் நோன்பு நோற்பவர்கள் அடுத்த இரண்