பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

141

தொழுகை

இறை நம்பிக்கையை செயல் வடிவில் வெளிக்காட்ட ஒவ்வொரு முஸ்லிமும் ஒரு நாளைக்கு ஐந்து வேளை கட்டாயம் தொழ வேண்டும். அவை: வைகறை, நண்பகல், மாலை, அந்தி, இரவு நேரங்களாகும். தஹஜ்ஜத் எனும் நள்ளிரவுத் தொழுகையும் தொழுவர்.

நமக்கு எல்லாவகை நலத்தையும் அளிக்கும் இறைவனுக்கு நன்றி தெரிவித்து, இறையருள் வேண்டுதல் தொழுகையாகும். ஐவேளைத் தொழுகையில் இறை நம்பிக்கை வலுப்படுகிறது. உயர்ந்த ஒழுக்கமுள்ள வர்களாய் மாற்றுகிறது. மனத்தைத் தூய்மைப்படுத்துகிறது. தீயசெயல் செய்ய விடாமல் தடுக்கிறது.

நோன்பு

இஸ்லாமிய ஆண்டிலுள்ள பன்னிரண்டு மாதங்களில் ஒன்பதாவது மாதம் ரமளான் ஆகும். இம்மாதத்தில் வைகறை முதல் கதிரவன் மறையும் வரை எதையும் உண்ணாமலும் பருகாமலும் இருத்தல் வேண்டும். எல்லா விதத் தீய எண்ணங்களையும் ஆசைகளையும் அகற்றுதல் வேண்டும். அன்பையும் கட்டுப்பாட்டையும் கடமையுணர்வையும் இறை பக்தியையும் நோன்பு கற்பிக்கின்றது. நோன்பின் மூலம் பிறர் பசித்துயர் அறிய ஈகை உணர்வு பெருகுகிறது. நோன்பு நோற்பவர்களுக்கு பொறுமையும் தன்னலமின்மையும் மன வலிமையும் உண்டாகிறது.

ஜகாத்

செல்வ வளம் உள்ளவர்கள் தமது சேமிப்பிலிருந்து இரண்டரை சதவீதத்தை ஆண்டுதோறும் கணக்கிட்டு ஏழை எளியவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுப்பது ‘ஜகாத்’ எனப்படும். இக் கடமையைத் தவறாமல் செய்வதன் மூலம்